வெள்ளி, 2 பிப்ரவரி, 2024
300 யூனிட் இலவச மின்சாரம்!!! வீட்டு Solar மின்சாரம் வீட்டுகாரருக்கே சொந்தம்! இதில் என்ன 300யூனிட் இலவசம்?
minnambalam.com - Kavi : மேற்கூரை சூரிய சக்தி மின்மயமாக்கல் திட்டம் மூலம் 300 யூனிட்வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில், பசுமை வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவித்தார்.
“மேற்கூரை சூரிய சக்தி மின்மயமாக்கல் திட்டம் மூலம், ஒரு கோடி வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட்வரை இலவச மின்சாரத்தைப் பெற முடியும்.
இலவச சூரிய ஒளி மின்சாரம் மூலம் வீடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை சேமிப்பு மற்றும் உபரி மின்சாரத்தை மின் விநியோக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும்.
சூரிய சக்தி மின்னுற்பத்தி நிறுவல், பராமரிப்பு ஆகியவற்றில் தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
நிலக்கரி வாயுவாக்கம் மற்றும் திரவமாக்குதல் திறன் 100 மெட்ரிக் டன் 2030-க்குள் அமைக்கப்படும். இது இயற்கை எரிவாயு, மெத்தனால், அம்மோனியா ஆகியவற்றின் இறக்குமதியைக் குறைக்கவும் உதவும்.
தாவர எரிசக்தி சேகரிப்பு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய நிதி உதவி வழங்கப்படும்” என்று அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.
பிரியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக