சனி, 13 ஜனவரி, 2024

PTR வெறும் ஒரு நிதி அமைச்சர் என மட்டும் நாங்கள் கருதவில்லை. Vimalaadhithan Mani

May be an image of 1 person and text

 Vimalaadhithan Mani :    ராஜகண்ணப்பனை தூக்கிவிட்டு சிவசங்கரை மாற்றியபோது கொண்டாடியவர்கள் நாங்கள்தான்.
இறையன்பு, உதயச்சந்திரன், சைலேந்திர பாபு என தளபதியின் ஒவ்வொரு நியமனத்தையும் வரலாற்றை மாற்றிய நிகழ்வுகள் என போற்றி போற்றி புகழ்ந்து எழுதியது நாங்கள்தான்.
இப்போது PTR ன் பதவி மாற்றத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்றால் காரணம் இல்லாமலா பேசவோம்.  PTR வெறும் ஒரு நிதி அமைச்சர் என மட்டும் நாங்கள் கருதவில்லை.  
கௌரவ சேனையின் சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே நுழைந்தானே அபிமன்யு அதுபோல் ஆரிய வியூகத்தை அச்சமின்றி உடைத்து சுக்குநூறாக்கிய முதல்வரின் முக்கிய தளபதியாகவே கருதுகிறோம்.  நிர்மலா சீதாரமனுக்கு  GST கணக்கு சொல்லிக் கொடுத்தது, ஜக்கியின் ஆன்மீகத் தோலை உரித்து தோரணம் கட்டியது,

 
ஆளுநர் ரவியின் ஊதாரித் தனத்தை சட்டசபையில் உரக்கப்பேசி அவருக்கு பாக்கெட் மணியை குறைக்கணும் என்றது,  ஏர்போர்ட்க்கு நாங்கள் தரும் நிலத்தை நீங்கள் அதானிக்கு இலவசமாக உள்வாடகைக்கு விடக்கூடாது , அப்படி விட்டால் எங்களுக்கு வாடகைப்பணம் வந்து சேரணும் என "மோதானி" யின் யோக்யதையை ஊரறிய புரட்டியது என சங்க பரிவாரங்களின் பார்ப்பனீய காட்டு தர்பாருக்கு எதிராக அவர் செய்த சமரசமற்ற  போருக்காக பார்ப்பனீயம் அவரை சுற்றி வளைத்து தாக்கும் போது அபிமன்யூவை காக்கத் தவறிய பாண்டவர் கூட்டம் போல நாம் PTR அவர்களை பலிகொடுத்து விடக்கூடாது என்றே அவருக்காக குரல் கொடுக்கிறோம்.
நாங்கள் PTR க்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்பது கண்டிப்பாக திமுக வை பலவீனப்படுத்தவோ, தமிழக முதல்வருக்கு எதிராக குரல் கொடுப்பதோ அல்ல.
நமது குரல் உளவுத்துறை வழியாக முதல்வரை சென்றடையலாம். அதனால் நன்மை நடக்கலாம் எனும் நம்பிக்கையில் தான் கழகத்திற்கு நல்லதென நாம் நினைப்பதை பொதுவெளியில் பதிவிடுகிறோம். சாமானியர்களால் உருவான இயக்கம் திமுக. சாமானியர்கள் குரலை காது கொடுத்து கேட்கும் என நம்புகிறோம். குரல் எழுப்புகிறோம்.
இடையில் பதவிகளை பெறுவதற்காக மட்டுமே தலைமை எடுக்கும் தவறான முடிவுகளையும் ஆதரித்து நீங்கள் எப்படி தலைமையை கேள்வி கேட்கலாம்  என்று எங்கள் மீது கோபப்படும் அல்லக்கை ஜால்ராக்கள் ஓரமாக போய் உங்கள் பிச்சை தட்டுடன் நிற்கவும் . எங்களுக்கு உங்கள் அறிவுரை கூந்தலுக்கு சமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக