வியாழன், 18 ஜனவரி, 2024

பௌத்தத்தின் தோற்றமே திராவிட ஆரிய பெரும் போருக்கான ஒரு தொடக்கம்

May be an image of 1 person and text that says 'பவுத்தம் ஆரிய -திராவிடப் போரின் தொடக்கம் எழில். இளங்கோவன் ටல் ரிதகாககம் 1'

 Vimalaadhithan Mani :   பிறப்பால் திராவிடரான புத்தர் சாதிகளற்ற சமத்துவம், சமூக நீதி,பெண் விடுதலை போன்ற திராவிட கருத்தியலை தூக்கிப்பிடித்து மது, களவு, பொய், திருட்டு, கொலை என்ற பஞ்சமா பாதகங்களை ஒழிப்பதற்காக தேரவாதம் என்றழைக்கப்பட்ட  புத்த மதத்தை தோற்றுவித்தார்.
ஆரிய கருத்தியலை அடியோடு அழிக்க  முயன்ற புத்த மதத்தின் வளர்ச்சி அதுவரை இந்தியாவில் புத்தர் குறிப்பிட்ட பஞ்சம பாதகங்களையும் அரசகுரு, அரச ஆலோசகர் என்ற போர்வையில் அரசு ஆதரவுடன் நிகழ்த்தி கொண்டு இருந்த பார்ப்பனீய வெறியர்களை அதிர்ச்சியிலும் பயத்திலும் ஆழ்த்தியது.
திராவிட போராளியான புத்தரை நேரடியாக எதிர்த்து வெல்ல முடியாது என்று உணர்ந்த பார்ப்பனீயம் நயவஞ்சகமாக பௌத்தத்தை ஆரிய கருத்தியலுடன் இசைவு கொண்டதாக மாற்றும் மகாயானம் என்ற புதிய பிரிவை நாகார்ஜுனர் என்ற ஆரிய பார்ப்பனர் மூலம் தோற்றுவித்து,
 புத்தர் ஆரம்பித்த தேரவாதம் என்றழைக்கப்பட்ட நிஜ பௌத்தத்தை ஹீன(ஈன) யானம் என்ற பெயரை கொடுத்து சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக ஈனப்பிறவிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்கான புத்தமத பிரிவாக ஹீனயானத்தை தாழ்த்தினர்.



மகாயானம் புத்தர் எதிர்த்த பஞ்சம பாதகங்களையும் ஊக்குவித்தது.
இந்தியாவை ஆண்ட படிப்பறிவற்ற முட்டாள் மன்னர்களை தங்கள் கையில் போட்டுகொண்டு ஆரிய பார்ப்பனர்கள் அவர்களுடைய வைதீக மதத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்த பௌத்த பிக்குகளை கொன்று குவித்தனர்.
இப்படித்தான் இன்று இந்தியாவை விழுங்கி கொண்டு இருக்கும் பார்ப்பனீயம் சாதிகளற்ற சமத்துவம், சமூக நீதி,பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த பௌத்தத்தை விழுங்கி செரித்து ஏப்பம் விட்டது.
அவர்களின் கருத்தியலுடன் சற்று ஒத்து போன சமண மதத்தை போனால் போகிறது என்று விட்டுவிட்டார்கள்.
உண்மையில் சொல்லப்போனால் பௌத்தத்தின் தோற்றமே திராவிட ஆரியத்துக்கு இடையிலான மிக பெரும் போருக்கான ஒரு தொடக்கமாக அமைந்தது என்று சொல்லலாம்.

இந்த திராவிட ஆரிய போர் வரலாற்றை, ஆரிய பார்ப்பனீயத்தின் அக்கிரமங்களை வரலாற்று தரவுகளுடன் தோலுரித்து செருப்பால் அடித்து இருக்கும் புத்தகம் இது. மனு நீதியை கையில் வைத்து கொண்டு ஆரிய பார்ப்பனர்கள் செய்த அக்கிரமங்களையும் தெய்வீகம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் எழுதி வைத்து இருக்கும் புராண இதிகாசங்கள் எந்த அளவுக்கு  கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள், இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகள், பெண்ணடிமைத்தனம், சூத்திரர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை போன்றவற்றால் நிரம்பியவை என்ற அதிர வைக்கும் உண்மைகளையும் நமக்கு சொல்லுகிறது இந்த புத்தகம். ஆரிய அயோக்கியவாதத்தை தரவுகளுடன் அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக