ஞாயிறு, 7 ஜனவரி, 2024

நோர்வேயில் தமிழ் பெண் டாக்டர் ராகவி வரதராஜன் படுகொலை !

 தேசம் நெட்  arulmolivarman :   நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (02) நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில் பல துப்பாக்கி சூடு காயங்கள் இருந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர் பல் வைத்தியர் என்பதோடு நீண்ட காலமாக இவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சடலம் கண்டெடுக்கப்பட்ட காரிலிருந்து கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



கொலை மிரட்டல் தொடர்பில் உயிரிழந்த பெண் பல தடவைகள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்ததோடு, அது தொடர்பில் உரிய முறையில் பொலிஸார் கவனம் செலுத்தவில்லை என குடும்பத்தினர் முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

agency news :  நோர்வேயில் இளம் தமிழ் டாக்டர் ராகவி வரதராஜன் அவரது முன்னாள் காதலரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.  
மேற்படி காதலனால் உயிராபத்து இருக்கிறது என்று ஏற்கனவே இவர் போலீசுக்கு தெரிவித்திருந்தார்.
அந்த காதலுக்கு போலீசால் கடுமையான எச்சரிக்கையும் கட்டுப்பாடுகளும் விதிக்க பட்டிருந்தன.
ஆனால் அவர் போலீசின் சகல கண்காணிப்புக்களையும் தாண்டி வந்து ராகவியை கொலை செய்துவிட்டார்
இருவரும் இலங்கை தமிழர்கள் என்று தெரிகிறது  
ராகவி வரதராஜன்  மிகவும் இனிமையானவர் மற்றும் அன்பானவர் , அனைவரின் மகிழ்ச்சியிலும் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
நோர்வேயின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரா கம்சி குணரத்தினம் இவரை கூறுகையில் இவர் மிகவும்  வலிமையானவர்  அக்கறையுள்ளவர்   கலகலப்பானவர்  எங்கள் குடும்பத்தில் மிகவும் நெருக்கமான நட்போடு இருந்தவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக