வியாழன், 18 ஜனவரி, 2024

திராவிடத்தால் உயரத்த தமிழக வியாபாரிகளுக்கு வடக்கன்களால் இவ்வளவு விரைவாக வீழ்ச்சி எப்படி சாத்தியமானது?

Raja Rajendran :  இது உங்களைக் கிளறும் பதிவு.  நீங்கள் யோசித்து பதிலளியுங்கள்.
1.) வளமான ஆதிக்க இடைச்சாதியினருக்கென்று இருந்த பல வணிகங்கள் (Monopoly) உங்கள் பகுதிகளில் இன்றும் அவர்கள் கைகளிலேயே உள்ளனவா ?
அதாவது, தென்னகத்திலிருந்து 100 வருடங்களுக்கு முன் படையெடுத்து சென்னைக்கு வந்த நாடார்கள் சென்னை முழுவதும் பரவலாக வைத்தது மளிகைக் கடைகள்.
அந்த மளிகைக்கடைகள்தான் அரிசிக்கடை, பாத்திரக்கடை, துணிக்கடை, மரக்கடை, நகைக்கடை, உணவகங்கள் என்று படிப்படியாக செழித்து வளர்ந்தன.
2.) ராஜஸ்தானிலிருந்து வந்த மார்வாடிகள் பெரும்பாலும் அடகுகடைகள், வட்டிக்கு பணம் கொடுத்தலில் மட்டுமே  கவனம் செலுத்தி பிறகு பணத்தை அவர்களும் படிப்படியாக வேறு தொழில்களில் முதலீடு செய்தனர் !
3.) பஞ்சாப்பிலிருந்து வந்த சர்தார்ஜிகள் அண்ணாசாலை சந்து பொந்துகள் அனைத்திலும் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள், மின் & மின்னணு சாதனங்கள் கடைகளை வைத்தனர்.


சென்னையில் நாடார்கள் வந்து மளிகைக்கடைகளை வைக்கும் முன்னரும் இங்கு அத்தகைய கடைகள் இருந்திருக்கத்தானே செய்யும் ?
அன்று சென்னை மாகாணம் ஆந்திராவுடன் இணைந்திருந்ததால் இங்கு பெரும்பாலும் தெலுகு மற்றும் தமிழ் செட்டியார்களிடம் மளிகை வணிகம் இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு படிப்படியாக அவர்களில் பலர் வேறு தொழில்களுக்கு உயர, மற்றும் அவர்களுக்கான அதிக வாய்ப்புகள் அவர்களுடைய மாநிலங்களில் கிட்டி, இடம்பெயர,  நாடார் கைகளில் மளிகை வணிகம் பெரும்பாலும் போனது !
இங்கு உற்று நோக்க வேண்டியது, ஒருவர் வந்து இன்னொருவரை அழிக்கவில்லை.  போட்டி இருந்திருக்கலாம்.  
இது சான்றுக்குச் சொல்வது.
இதேபோல உங்கள் பகுதிகளில் அரிசி ஆலைகள், இரும்பு வணிகம், மோட்டார் பம்ப் உற்பத்தி, பஞ்சு வணிகம் & நூல் உற்பத்தி, துணி உற்பத்தி & வணிகம், பட்டாசு உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, உப்பு, சர்க்கரை ஆலை, கட்டுமானப் பொருட்கள் & பெயிண்ட் கடைகள், ... இப்படியான பலவும் கூட அந்தந்த பகுதிகளுக்கேற்ப குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினர் கைகளில்தான் இருந்திருக்கும் !
இப்பத்தான் முக்கியமான பாய்ண்ட்.
இத்தகைய ஆதிக்கச் சாதியினர் பெரும்பாலும் சங்கிகளாக மருவியிருப்பதை நாம் காண முடிகிறது.  இவர்கள்தான் ஜி கலாச்சாரத்தை பரப்பியவர்கள்.
சங்கிக் கூடுகையின் போது இவர்கள் தங்களுடைய தொழில் விவரங்களைப் பகிர, இவர்களுக்கு நிதி, கடன்,  வரி ஏய்ப்பு உத்திகள், சட்டச் சிக்கல்களை மேலிட தொடர்புகள் மூலம் களைதல் போன்ற உதவிகளின் மூலம் வேற்று மாநிலச் சங்கிகள் படிப்படியாக இவர்களுக்குள் பரவுகிறார்கள் !
குறுகிய காலங்களுக்குள் இவர்களிடம் அபரிமிதமான நற்மதிப்புகளை பெற்றுவிடும் 'அவர்கள்' நேரடியாக இவர்கள் தலைகளிலேயே கைவைக்கிறார்கள் !
மத & சாதிப்பெருமித மயக்கத்தில் இது இவர்களுக்கு உடனடியாகத் தெரிவதில்லை.
துல்லியமாகச் சொல்கிறேன்.  மேலே வடையான் 2014 ல்தான் வந்தான்.  ஆனால் அதற்கு முன்பே 2012 - 2013 லிருந்து இதற்கான விதைகள் தூவப்பட்டன.  கடந்த பத்து வருடங்களுக்குள் அந்த பார்த்தீனியம் காடாக வளர்ந்து செழித்து நிற்கின்றன.  ஆமாம், இன்று வடக்கன்கள்தான் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சிவகாசி, நெல்லை போன்ற தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் பல தொழில்களில் கில்லியாக உயர்ந்து நிற்கிறான்.  அதாவது அவர்கள் இவர்களிடமிருந்து உறிஞ்சி எடுத்துவிட்டான் !
Department Stores, Online Grocery Apps, Reliance, D mart, More போன்றவைகள் எல்லாம் அறிவியல் வளர்ச்சியாகவும், மக்கள் பெருக்கத்திற்கேற்ப விளையும் நவீன கால முன்னேற்றங்களாக பார்த்தாலும், அவைகள் ஏன் வடக்கன்களாலேயே அமைக்கப்படுகிறது ?
அவன்களால் மட்டும் எப்படி சல்லிசாக, அனைத்து பொருட்களையும் வாங்க / விற்க முடிகிறது ?  நடப்பது எல்லாம் Hot Cash வணிகம்.  சந்து பொந்துகளில் இருக்கும் அண்ணாச்சி கடைகள் கடன் கொடுக்கும் வரை அந்த வணிகம் அவர்களிடம் இருக்கும்.  ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை மளிகைக்கடைக்காரனுக்கு பெண் கொடுத்தால் தன் பெண் பசியில்லாமலாவது வாழ்வாள் என்கிற அதிகபட்ச ஆதரவுடன் அவனுக்கு அங்கீகாரம் இருந்தது.  இன்று நிராகரிப்பின் பட்டியலில் முதலிடம் வகிப்பவன் அவன்தான்.  சூழலோடு சமூக மாற்றமும் அவனைச் சோதிக்க, தெரிந்த, கைவந்த தொழிலை அவனே முன் வந்து வடக்கன்களுக்கு தாரை வார்க்கிறான்.  என் ஏரியா பால்கடை, ஐஸ்கிரீம் கடை, எலக்ட்ரிகல்ஸ், Hardware, Mobile Shops அனைத்துமே அவன்களுடைய கைகளில் ...
 

அவன்களுக்கு GST, ED, IT, PSU Banks என ஒன்றியம் சார்ந்த அனைத்து அதிகார மையங்களும் உதவி செய்கின்றன.  போலி பிராண்ட் பொருட்கள், வரி ஏய்ப்பு செய்து குறைந்த விலைக்கு விற்றல், பொருட்களை சப்ளை செய்தவனுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விடுதலுக்கு அவன்களில் பெரும்பாலோர் சற்றும் தயங்குவதில்லை !
ஒருவேளை மயக்கம் தெளிந்து இவன் என்னடா நம் அடி மடியிலேயே அவன் கை வைக்கிறானே எனக் கேள்வி எழுப்பினால், சார்ந்த அதிகாரத் துறைகளிடம் காட்டிக் கொடுப்பவனும் அவனாகவே இருப்பான் !
 

இப்படியான இராட்சத ஆக்டோபஸ் கரங்களின் உதவியால்தான் மேலே வடையான்களால் தொடர்ந்து வெல்ல முடிகிறது.  அடுத்த வெற்றி இந்த ஆதிக்கச் சாதியினரை ஓட்டாண்டியாக்கி ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கும் !
எங்களால தின்ன இல்ல, இப்ப கக்கு என்று அவன்கள் மண்டையில் அடிக்கும் போதுதான் இந்தப் புதுச் சங்கிகளுக்கு மீண்டும் மூளையே வேலை செய்ய ஆரம்பிக்கும்.
நான் சொன்னதெல்லாம் பொய்யாகப் பட்டால் நீங்கள் உங்கள் பகுதிகளில் புதிது புதிதாக திறக்கப்பட்டிருக்கும் கடைகளின் பின்னணி பற்றி விசாரித்துப் பாருங்கள்.
திராவிடத்தால் இவ்வளவு உயரத்துக்கு வந்த இவன்களுக்கு வடக்கன்களின் அவல வாழ்க்கை இவ்வளவு விரைந்து சாத்தியமாகியுள்ளது,
 

தீ பொசுக்கும் என்பது குழந்தைகளுக்கு கூட தெரியும்.  அருகில் நெருங்கும்போதே அதன் வெப்பம் எச்சரித்துவிடும்.  ஆனால் தீக்குள் விரலை விட்டால் கடவுளைத் தொடும் சுகம் கிட்டும் என்று ஏமாற்றும்போது பக்குவப்பட்ட மூளை கூட மழுங்கிப் போகும் !
புதுச்சங்கிகளுக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் !
@Raja Rajendran Tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக