திங்கள், 22 ஜனவரி, 2024

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் கால் தடுக்கி விழப்போன மோடி.. பதறிய அர்ச்சகர்கள்..

Ram Temple Inauguration: PM Modi misses the feet and slipped in garbh grah when ram lalla statue pran prthishta

tamil.oneindia.com  - Nantha Kumar R :  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கருவறையில் பிரதமர் மோடி பிரான் பிரதிஷ்டை செய்தார். இந்த வேளையில் அவர் கால் தடுக்க கீழே விழப்போனதால் அங்கிருந்த அர்ச்சகர்கள் பதறிப்போன சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது. கடந்த 17 ம் தேதி அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
Ram Temple Inauguration: PM Modi misses the feet and slipped in garbh grah when ram lalla statue pran prthishta


கடந்த 18 ம் தேதி கோவிலில் சிலை நிறுவப்பட்டது. இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறைக்கு சென்று அர்ச்சகர்களுடன் பால ராமர் சிலைக்கு பிரான் பிரதிஷ்டை செய்தார். பிரான் பிரதிஷ்டை முடிந்த பிறகு பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. திருவுறுவ சிலையாக இருந்த பால ராமர் தெய்வீக சிலையாக மாறி அருள் பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் கும்பாபிஷேக விழாவில் ‛முக்கிய யாஜ்மன்’ ஆக நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.

சமஸ்கிருத மொழியில் யாஜ்மன் என்பதற்கு சடங்குகளை முன்னின்றி செய்யும் நபர் என்று பொருள்படும். அதன்படி பிரதமர் மோடி தான் இன்றைய கும்பாபிஷேக விழாவில் பால ராமர் சிலையின் பாதத்தில் அமர்ந்து பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்தார். அர்ச்சகர்கள் வழிக்காட்டுதலில் அவர் இந்த சடங்குகளை செய்தார்.

முன்னதாக இந்த பிரான் பிரதிஷ்டை சடங்குகளை செய்வதற்கான பிரதமர் மோடி கோவில் கருவறைக்குள் நடந்து வந்தார். பால ராமர் சிலை முன்பு அவர் நடந்து சென்றபோது திடீரென்று கால் தடுக்கி விழப்போனார். ஆனால் உடனடியாக சுதாரித்து கொண்ட பிரதமர் மோடி விழாமல் நின்றார். இருப்பினும் பிரதமர் மோடி கால் தடுக்கியதை பார்த்த அர்ச்சகர்கள் உள்பட அனைவரும் பதறிப்போயினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாக வேகமாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக