வெள்ளி, 26 ஜனவரி, 2024

இலங்கையில் 470 யானைகள் மின்சார வேலிகளால் உயிரிழப்பு கடந்த வருடத்தில் மட்டும்..

தேசம் நெட்  arulmolivarman : நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரமற்ற மின்சார வேலிகளால் காட்டு யானைகள் உயிரிழப்பது கடந்த காலத்தில் பதிவாகியிருந்த நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தரமற்ற மின்வேலிகளை அகற்றி தரமானதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த சில தினங்களில் 12 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 470 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் இதற்கு முன்னர் 44,980 ஏக்கர் இராணுவத்தினர் வசமிருந்தது.

 இதில் 90 வீதத்திற்கும் அதிகமான காணிகள் மக்களிடம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தினரிடம் 7,379 ஏக்கர் காணிகளே உள்ளன.

இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன. 7342 ஏக்கர் அரச காணிகளாகும். தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக