புதன், 17 ஜனவரி, 2024

Iran Pakistan War ? பாகிஸ்தான் உள்ளே ஏவுகணை அனுப்பி.. 2 இடங்களில் தாக்கிய ஈரான்!

Shyamsundar tamil.oneindia.com : கராச்சி; பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. .... பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான், இந்தச் சம்பவம் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்றும், "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் எச்சரித்து உள்ளது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது, கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க போகிறது என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் - ஈரான் இடையே போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே பல நாடுகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது. முக்கியமாக ஈரான் ஆதரவு ஹவுதி படைகள் தீவிரமாக அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன.

ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் பிடன் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் செங்கக்கடலில் அமெரிக்கா - ஹவுதிகள் இடையே மோதல் நடக்கும் நிலையில் பிடன் முடிவு செய்துள்ளார்.

நேற்று இரவில் இருந்தே ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

நேற்று ஹவுதி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க செங்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நேற்று காலைதான் ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல் ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்க கப்பலை தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது

ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தோராயமாக 2-3 ஏவுகணைகள் கப்பலை தாக்கி சேதப்படுத்தி உள்ளன.. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதல் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் அமெரிக்கா: இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் ஈரான் நேரடியாக தலையிட்டு உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி போராளி குழுக்கள் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவு செயல்பட்டு வருகிறது. ஈரான், ஏமனில் இயங்கி வரும் இந்த ஹவுதி காஸாவில் இயங்கும் ஹமாஸ் படைகளுக்கு ஆயுதங்களை அனுப்பி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே ஏமனில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

தொடர் தாக்குதல்; கடந்த நாட்களாக ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல்கள் மீது ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டது. இவை அமெரிக்காவின் இடைமறித்து ஏவுகணைகள் மூலம் மறித்து அழிக்கப்பட்டன.

இந்த நிலையில் முதல்முறையாக அமெரிக்காவின் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு உள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற கப்பலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கப்பலில் உள்ளவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் அல்லது குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரான் ஆதரவு ஹவுதிகள் நவம்பர் முதல் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக