ஞாயிறு, 10 டிசம்பர், 2023

thenewsminute தன்யா ராஜேந்திரனின் முதலாளி சித்திரா சுப்பிரமணியன் Duella யார்? இவர்களின் ஆர் எஸ் எஸ் தொடர்புகள் .. flashback

ராதா மனோகர் : Mrs .chitra subramaniam duella  சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
Dhanya Rajendran

ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.   
இவர்  சுவிஸ்லாந்தை சேர்ந்த  டாக்டர் கியான்கார்லோ டூல்லா  என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு   செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில்  ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.
திரு ராஜீவ் காந்தியை ஒரு ஊழல் பேர்வழி என்று பொதுமக்களை நம்பவைத்ததில் இவரின் நச்சு எழுத்துக்கு பெரும் பங்கிருக்கிறது  
இவரின் ஒவ்வொரு  எழுத்தையும்  பெரிய பிரசார ஆயுதமாக தலைமேல் சுமந்தவர் திரு வை கோபாலசாமியாகும்.
chitra subramaniam duella

இவர்  1958 ஆம் ஆண்டில்  ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.
தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியலில் முதுகலை டிப்ளோமாவும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 1989 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்விக்கு இவர் எழுதிய போபோர்ஸ் கதைதான் பெரிய அளவில் பயன்பட்டது என்று கூறப்படுகிறது.
திரு ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த போபர்ஸ்- ஹோவிட்சர் bofors howitzer பீரங்கி  ஒப்பந்தம் பற்றி ஒரு நாள் சுவீடன் வானொலியில் ஒரு செய்தி வெளியானது
போபோர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் இந்தியாவின் முக்கிய புள்ளி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி
அந்த செய்தியை அளவு கணக்கில்லாமல் ஊதி பெருக்கியத்தில்  தமிழ்நாட்டை சேர்ந்த இன்னுமொருவருக்கும்  முக்கிய பங்கிருக்கிறது   
இந்து பத்திரிகையும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் மட்டுமல்லாது அவர்களோடு ஒரு கூட்டணி சேர்ந்தது போல வை கோபாலசாமியும் சேர்ந்து திரு ராஜீவ் காந்தி மீது சேறு வாரி வீசுவதில் கடுமையாக உழைத்தார்கள்
இதன் காரணமாக சித்ரா சுப்பிரமணியத்தை ஒரு உலகப்புகழ் பெற்ற  பத்திரிகையாளராக  பிரபல இந்திய ஊடகங்கள்  மட்டுமல்லாது ராஜீவின் எதிரிகளும் சேர்ந்து உயர்த்தி பிடித்தனர்
1987 இல் இவர் சுகாதாரம், வர்த்தகக் கொள்கை  ஊடகம் போன்ற துறைகளுக்குக்கான ஆலோசனை நிறுவனத்தை  ஜெனீவாவில் CSDconsulting  அமைத்தார். அதாவது காப்பரேட்டுக்கள்  மற்றும் அரசியல் கட்சிகளுக்கான புரோக்கர் கம்பனியை நிறுவினார்    
இவர் இன்று .thenewsminute.  தி நியூஸ் மினுட்டின் நிறுவனர்களில் ஒருவராகவும் நிர்வாக ஆசிரியராகவும் உள்ளார்..
நியூஸ் மினிட் சஞ்சிகை தென்னிந்திய மாநிலங்களை குறிவைத்து சங்கிகளின் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறது
தென்னக சங்கிகளின்  நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம்  24 மணிநேரமும் கடமை புரிகிறது
 அன்னா ஹாசாரே பற்றி ஒருவரும் மறந்திருக்க மாட்டார்கள்  அவரை  இந்திய தேசம் காப்பவராக எல்லா ஊடகங்களுக்கும் உயர்த்தி பிடித்ததில்  இந்த அம்மையாரின் பங்கும்  பெரிது.
நரேந்திர மோடியை ஆட்சிக்கு கொண்டுவந்ததிலும்,
 இன்றுவரை ஊடக பொதுவெளியில் மோடியை காப்பாற்றுவதிலும் இவர் தனது  பங்கை அளித்து கொண்டிருக்கிறார்
இவரது வாழ்வில் இவருக்கு வந்த ஒரே ஒரு பிரச்சனை கான்சர் வியாதிதான்  அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார் என்றெண்ணுகிறேன் .
குடும்பமாக வாழ்வது  சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில்.  அங்கிருந்து கொண்டே இந்திய ஊடகங்களில் தன் கைவரிசையை காட்டுகிறார்  
இவர்  1997 ஆம் ஆண்டில் சுவிஸ் அரசாங்கம் சுவிஸ் வங்கிக்கான இரகசிய ஆவணங்களையும் கூடுதல் விவரங்களையும் இந்திய அரசிடம் ஒப்படைக்கும் வரை சுவிட்சர்லாந்தில் நடந்த விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து அறிக்கை அளித்து வந்தார்.
இவரது அடியாள் வேலைக்காக பி.டி.கோயங்கா விருது மற்றும் சமேலி தேவி விருது உட்பட பல இந்திய பத்திரிகை விருதுகளைப் பெற்றுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக