ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதா கிருஷ்ணன் நேரத்திற்கு ஒரு ஆடை சினிமா நடிகன்!

May be an image of 7 people and text that says 'மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை! HEW ம பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ராதாகிருஷ்ணன் புதிய தகவல் TWE'

சாவித்திரி கண்ணன் : பெருமழை காலத்தில் களத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தான் சொல்லி ஆச்சரியப்பட்டனர்! கடுமையான புயல், மழை சமயங்களில் கூட இவரால் எப்படி நாளொன்றுக்கு மூன்று உடைகள் மாற்றிக் கொள்ள முடிகிறது!
முதலமைச்சர் வெள்ள நிவாராணப் பணிகளை பார்வையிட வருகிறார் என்றால், அந்த இடத்தில் ஒரு டிரஸுடன் ஆஜர் ஆகிறார்!
வேறொரு இடத்தில் அமைச்சர் மா.சு வருகிறார் என்றால், அங்கு ஒரு டிரஸ் மாற்றி வந்துவிடுகிறார்.
மாலை பிரஸ் மீட் தருகிறார் என்றால், அப்போது முற்றிலும் வேறொரு உடை!
நடிகர்கள் கூட தோற்றுவிடுவார்கள்! ஐம்பது வயதை கடந்த அடையாளத்தை அழகாக மேக் அப்பில் சரி செய்து தோற்றப் பொலிவுடன் வந்துவிடுவார்!


எந்த துறையில் இருந்தாலும் சதா சர்வ காலம் மீடியாவில் தன்னை வெளிப்படுத்தியபடியே இருப்பதில் நிகரற்றவர். இவர்
அளவுக்கு மீடியா மேனியா, சுய விளம்பரம் உள்ள இன்னொரு அதிகாரியையை இந்தியா முழுக்க தேடினால் கூட கிடைக்கமாட்டார்கள்! ஆனால், இருந்த எல்லா துறைகளிலும் பெர்பாம்மென்ஸ் என்று பார்த்தால் சராசரிக்கும் குறைவு தான்!
முக்கியமாக சுகாதாரத் துறையில் இருந்த போது மருத்துவர்கள், செவிலியர்கள்  என அனைத்து தர்ப்பிலும் இவர் பெயரை உச்சரித்தாலே கோபத்தின் உச்சிக்கு போனதை பல தடவை பார்த்துள்ளேன். ’’அந்த ஆள் கிடக்கிறார்! யூஸ்லஸ்..” என கசந்த உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள்!

தற்போது அதே நிலையை மாநகராட்சி சக அதிகாரிகள், ஊழியர்கள் தொடங்கி துப்புறவு தொழிலாளி வரை அனைவரிடமும் பார்க்கிறேன். மிக்ஜாம் புயல்,மழை, வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க திரானியின்றி சொதப்பிவிட்டார்! குறிப்பாக பெருமழை வெள்ளத்தின் போது பணியாற்றிய துப்புறவு தொழிலாளிகளுக்கு அடைப்படை தேவைகளையோ பாதுகாப்புகளையோ கூட உத்திரவாதப்படுத்தவில்லை. வேலைமொத்ததில் வேலைக்கு லாயக்கற்றவர் என்ற விமர்சனம் துறை சார்ந்த்வர்கள் தரப்பில் துலக்கமாக வெளிப்பட்டது!

எப்படியோ ’மீடியா லாபி’யை நல்லா தெரிந்து வைத்திருக்கிறார். அவரது பாப்புலாரிட்டிக்கு அவரது ஆதிக்க சமூகத்தின் பின்னணியும் ஒரு காரணம்! மத்திய ஆட்சியாளர்களிடம் நல்ல நெருக்கத்தை பேணுகிறார் என்பது இவருக்கான கூடுதல் பலம்! வெட்டினரி டாக்டருக்கு படிச்சு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி வெளுத்து வாங்குகிறார் ராதா கிருஷ்ணன்!
அனுபவி ராஜா, அனுபவி! உம்ம காட்டில மழை!
சாவித்திரி கண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக