புதன், 27 டிசம்பர், 2023

திமுக ஐடி விங் தோல்வியுற்றதா? எங்கே? எப்படி? ஏன்?

 Pa Prem  :  திமுக ஐடி விங் எங்கே தொல்வியுற்றது?
எம்.எம்.அப்துல்லா
டான் அசோக்
டாக்டர் புருனோ
எல்.ஆர்.ஜகதீசன்
சாய் லட்சுமிகாந்த்
ராஜராஜன்
பிலால் அலியார்
விக்னேஷ் ஆனந்த்
கார்த்திக் ராமசாமி
ரவிசங்கர் அய்யாக்கண்ணு
இன்னும் பலர் உள்ளிட்ட பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பெயரில் தனித்தனி முகங்களை போர்த்திக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக தலித் தரப்பிலிருந்து மேலெழுந்து வந்த குரல்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி, ஆன்லைனில் மிகப்பெரிய அளவில் இடதுசாரி, தலித் வெறுப்பை முன்னெடுத்ததன் விளைவை இன்று திமுக சந்தித்துக் கொண்டிருக்கிறது.
பல முக்கியமான திமுக அனுதாபி, தலித் சோசியல் மீடியா செயற்பாட்டாளர்களை ஓரம் கட்டியதில் மேற்குறிப்பிடப்பட்டவர்களின் பங்கு மிக மிக மிக முக்கியமானது..
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தனி நபர் தாக்குதல்களை ஒருங்கிணைத்து பல தலித் திமுக அனுதாப சோசியல் மீடியா இன்ஃபுலுயன்ஸர்களைத் துரத்தி விட்டிருக்கிறார்கள்.
அவர்களைத் துரத்தி விட்டு, இன்று இந்த நபர்கள் எல்லாம் நம் வரலாற்று எதிரிகள் மீது வலிமையான தாக்குதல்களை துல்லியமாக முன்னெடுக்கிறார்களா? என்றால், அதுவும் இல்லை..


டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் எதிரிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தலைப்பில் அசிங்கமான ஹேஸ்டேக் செய்யும் போதும், இந்த கையாளாகாத கும்பல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது..
"கதறட்டும்", " அடித்தாடுவோம்" என்கிற இந்த இணைய கும்பலின் வறட்டு சொல்லாடல்கள் வெறுமனே தலித் எதிர்ப்பில் மட்டும் தான் சுருங்கிப் போனதோ, என்னவோ?
முடிந்தால், இந்த கும்பல்... அப்படியே போய் TRB Rajaa -விடம் முறையிட்டு.. இதற்கு மேலாவது DMK ITWing -ஐ வலிமையாக செயல்பட வைப்பார்கள் என நம்புவோம்.
M. K. Stalin Udhayanidhi Stalin புத்தியோடு, சுதாரித்துக் கொள்ளுங்கள்!!


ஆர்.பி.எம். இராஜ்குமார் : அவங்க மேலலாம் மேலிடமே முடிவு எடுக்க முடியாது. ஏன்னா அவிங்களுக்கு தனி மேலிடம்.

தமிழ் உதயா :  அந்த சிங்கப்பூர்காரன் என்ன நடந்தாலும் கல்ல முழுங்குன மாதிரியே இருப்பான் ....

எரிசினக் கொற்றவை : இதில் அப்படியே தமிழர் வாழ்வியல், வரலாறு பேசுவோர் மீது அவர்கள் பூசிய நாம் தமிழர் சாயத்தையும்,
தம்பி தங்கச்சி அக்கா ன்னு அவர்கள் செய்த புல்லிங்க்யையும் சேர்த்துக்கோணும்... சரியான வரலாற்று புரிதலோ, திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்கம் செய்த வேலை என ஒரு மண்ணும் தெரியாமல் தமிழர் சார்ந்த வரலாறுகளை பேசினால் அத்துணை ஏளனத்தோடு அணுக வேண்டியது...,

Annamalai Raju : இப்பாவாச்சும் எதுனா பேசுங்கடா.. எதுனா பாய்ண்ட் வரட்டும்னு துண்ட வாய்ல இருக்கமா வச்சு கடிச்சிட்டு உக்காந்து இருக்கானுங்க..
அப்போ கடைசில அவுட் சோர்ஸ் டீம் தான் வந்து எதுனா பண்ணனுமா?

Manikk Vel  :  Illana mattum apadiye vck named bsp line na panniruvanga...kammnu iruna 🤣🤣

Pa Prem : Manikk Vel BSP are minorities in social media.. Avanungalai parthu trigger agi evlo Perai izhanthirukkanunga theriyuma???

Manikk Vel :  Pa Prem anna vck name la irukkara pathi Peru avanga thana...ena illana mattum DMK va ethume Sola matanga...avolo nalavanga...rest edu na po na

பீமா  : மேல சொன்ன கூட்டம் வெளிப்படையான அம்பேத்கர் வெறுப்பை வேறு பேசியது ...
கூடவே ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி சீமானுக்கு mileage ஏத்தி விட்டதும் இந்த கூட்டம் தான் ...
Typical சங்கி mentalityயில் இயங்கும் இந்த கூட்டம் இணையத்தில் ஒரு தம்பிகள் போல bully செய்யும் ஒரு மாட்டு மந்தையை உருவாக்கி வெறும் தலித் வெறுப்பை உமிழ மட்டுமே முழு நேரம் இயங்குகிறது ... குறிப்பாக இதன் பலன் தென் மாவட்டங்களில் நல்ல பயணலித்துள்ளது ..

Murugan Murugaas :  முக்கியமா புலிகள் எதிர்ப்பு பேசி தமிழ் தேசிய உணர்வார்கள திமுக பக்கம் நெருங்கவிடாம பண்ணி அவங்கள பகையாளியா மாத்தினது

Jawahar Balasubramanian :  Murugan Murugaas நாம் டம்ளர்கள் பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு திமுகவை மட்டுமே குறி வைத்து இந்த 6-7 வருசம் அவதூறு பரப்பினபோது, தமிழ் தேசிய உணர்வார்கள் திமுக பக்கம் நெருங்கி இருந்து துணை நின்றார்களா ?

Murugan Murugaas :  Jawahar Balasubramanian உணர்வார்கள் ன்னு நா சொல்ற அந்த பொது வரையறைக்குள்ள வெறுமனே வெகு சிலர அடக்கி சுருக்கி பாத்தீங்கன்னா அது உங்க அறியாமை.
அப்றம், 2009 தெடங்கி 2014 வர திமுக காங்கிரஸ் குறித்தான அத்துனை விமர்சனங்களுமே ஞாயமானது தான். வாக்கு வாதங்களுக்கு அப்பாற்பட்டு அது அத்தனையும் ஓத்துக்கிட்டு அதுக்கு மன்னிப்பு கேட்டு கடக்க முயற்சிக்கிறது தான் புத்திசாலி தனமேயொழிய,
 அந்த இடத்துல திமுகவ காப்பாத்துறதா நினச்சு ஈழப்போராட்டத்தையோ, தலைவர் பிரபாவையோ ஏதாச்சும் பேச ஆரம்பிச்சா விளைவுகள் மோசமாருக்கும்.
முக்கியமா சொல்லப்போனா நாதக ங்கற ஒரு சிறு கும்பல எதிர்கொள்ள துணிவின்றி தலைவர் பிரபாவ தப்பா பேசினதோட விளைவு தான்,
 உணர்வாளர் மத்தியில திமுகவுக்கு இவ்ளோ கெட்டபெயர்.
இப்ப கடைசியா ஒன்னு சொல்றேன். உணர்வாளர்களுக்கு இப்ப திமுவோட தயவு கிடையாது.
 ஏன்னா அவங்க யாரும் தேர்தல் அரசியல்ல கிடையாது
யாருக்கும் ஓட்டு கணக்கு பாத்து பேச. ஆனா திமுகவுக்கு உணர்வாளர்கள் தேவ. களப்பணியாற்றவும் சரி, கருத்தியல் ரீதியான பாதுகாப்புக்கும் சரி. புரிஞ்சிக்கலனா போக் வேண்டிதான்

Jawahar Balasubramanian :  Murugan Murugaas ஐயா நான் திருட்டு ரயில், 3 பொண்டாட்டி, ஓங்கோல்னு அவதூறு பத்தி கேட்டா நீங்க விமர்சனம் பத்தி பேசுறீங்க.
சரி திமுகவை விடுங்க. நாதக & ஈழத்தமிழர்கள் கும்பல் பெரியார் மீது அவதூறு பேசும்போது தமிழ் உணர்வார்கள் மனசு புண்படலையா ?
அவர்களை தனிமைப்படுத்தணும்னு தோணலையா.
நீங்களும் பேச மாட்டீங்க, பதிலுக்கு நாங்க பேசினா, தலைவர் பிரபாகரனை பத்தி பேசினா சும்மா இருக்கமாட்டோம்னா. தமிழ் உணர்வாளர்களுக்கு தலைவர் பிரபாகரன் தான் முக்கியமா, தந்தை பெரியார் முக்கியமில்லையா ?

Murugan Murugaas : Jawahar Balasubramanian ஏங்க நா எத பத்தி பேசுறேன் நீங்க எத பத்தி பேசுறீங்க????
 நீங்க சொன்ன அந்த திருட்டு ரயில் 3 பொண்டாட்டி ஓங்கோல் இந்த மேட்டர் டீல பண்றது உங்க தனிப்பட்ட கட்சி விவகாரம்.
நீங்க தான் அதிமுக காரன் பாஜக காரன், நாதக காரன்னு இனம் பிரிச்சு அவவனுக்கு தக்க பதிலடி தரனும்‌
நா பேசுறது உணர்வாளர்கள் முன் வைக்கிற குற்றச்சாட்டு பத்தி.
நீங்க அதிமுக காரன கௌண்ட்டர் பண்ண எடப்பாடிய வச்சு செய்யனும்
அத விட்டு செத்துப்போன ஜெயலலிதா தனி வாழ்க்க குறித்து தப்பா பேசி பொது மக்கள் ட்ட அந்த லேடிக்கு அனுதாபம் வாங்கித்தர்றீங்க.
பாஜக காரன வச்சு செய்ய ஆளுமைய பயன்பணுத்தி அதிகார வட்டத்த வலுப்படுத்தி அவனுக கொட்டத்த அடக்கனும்
அத விட்டு அவனுகள ஆண விட்டு வேடிக்க பாக்றீங்க...
ஆக்டிவா இருக்ற பிடிஆர் மாதிரி ஆளுங்கள பலி கொடுத்து ஆஃப் பண்ணிட்டீங்க...
 நாதக காரன் பண்ற சேட்டைக்கு சீமான வச்சு செர்யனும்
அத விட்டு தலைவர் பிரபாவ தொட்டு விளாண்டு ஒட்டுமொத்த உலக தமிழினத்த பகச்சுக்கிறீங்க....
ஆதரவா துணையா நிக்கிற தலித்திய கம்யூனிச இயக்கங்கள கொச்சப்படுத்தி தலித் லிரோத சாதிய ஆதிக்கவாதிகளுக்கு துணை போறீங்க...
 பண்றதெல்லாம் நீங்க சொதப்பிட்டு இப்ப அணுத்தவங்கள சொல்றீங்க??? என்ன ஞாயம் இது?

Murugan Murugaas : Jawahar Balasubramanian look தலைவர் பிரபா வேற தந்தை பெரியார் வேற இல்ல ‌.
ரெண்டு பேரையும் ரெண்டு கண்ணா தான் உணர்விளர்கள் பாவிக்கிறாங்க.
நீங்க தான் அவஙாகள்ல தலைவர் பிரபாவ காவு கொடுக்குறீங்க விளைவுகள் புரியாம

Jawahar Balasubramanian :  Murugan Murugaas நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீங்கறீங்களே. திமுக்காரன் எதிர்வினைக்கு பிரபாகரனை பேசும்போது நோகுற உலக தமிழினம் மனசு, தந்தை பெரியாரையும் தலைவர் கலைஞரையும் நாதக, ஈழத்தமிழர்கள்(போன வாட்டி படிக்க மறந்துட்டீங்க) பேசும்போது ஏன் நோக மாட்டீங்குது ?

Murugan Murugaas : Jawahar Balasubramanian யய்யா சாமி.... தந்தை பெரியார எவன் எங்க வம்பிழுத்தாலும் அத நாங்க பாத்துப்போம்...
அதெல்லாம் உயிரே போனாலும் நாங்க அவர விட்டுத்தந்ததில்வ எவன்ட்டயும். ஆனா அதே வேளையில கலைஞர காப்பாத்துறதா நெனச்சு சீமான டார்கெட் பண்றதுக்கு பதிலா தலைவர் பிரபாவ தொட்டு தேவல்லாத ஒரண்ட இழுத்துட்ருக்கீங்க நீங்க.
முடிஞ்சா புரிஞ்சிக்கங்க. இல்லன்னா இப்டியே விட்ருங்க. எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துட்ருக்க முடியாது. டாட்.

Jawahar Balasubramanian : Murugan Murugaas நாதகவும் ஈழத்தமிழர்களும் வம்பிழுத்துட்டு தான் இருக்காங்க,
நீங்க என்னங்கைய்யா பார்த்தீங்க,
ஓட்டு அரசியல், இயக்க அரசியல்ல இருந்து தனிமைபடுத்த எதாவது முயற்சி செஞ்சீங்களா ?
அவனுங்களுக்கு பிரபாகரன் முக்கியம்னா, நாங்க படிச்சு நல்ல நிலைமைல இருக்க முக்கிய காரணியான கலைஞர் எங்களுக்கு முக்கியம்ய்யா 🙏

Selvam Sibi :  இதில் கூறியிருப்பது மிகவும் உண்மை

மகிழன் க : உண்மைதான் அய்யா, instagram முதற்கொண்டு அதிமுக, பிஜேபி காரர்க்கள் திமுகவை குத்தி குதரிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் திமுகாவின் ஐடிவிங் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை என்பது போலவே இருக்கிறது .

Vijay Guru : அருமை சின்னப்பண்ணை ....

Saravanan Velayutham : கூலிக்கு மார் அடிப்பவனிடம் போயிட்டு கொள்கை எதிர்பார்க்க முடியாது... அது அவ்வளவுதான்

Boanerges Gangapatla : May be an image of 1 person and text that says 'செய்திகள் நாட்டிலேயே அறிவார்ந்த IT விங் திமுக IT விங் தான்!'

Rajesh Rajamani : Thala. In my opinion, the only party that uses social media effectively is the BJP.
I don't think any other party comes even close. This is partly also because of how social media's algorithm works. The negative politics of BJP by default works well with how social media amplifies their hate content. Unfortunately, almost all other parties imitate this negative political model. Whether it is the DMK or Congress or even VCK, they all imitate the social media model that has worked well for BJP. This could be corrected only if there is completely a new vision or strategy to play online politics.
1d
Reply
Edited
Pa Prem
Rajesh Rajamani தல, சும்மா இல்ல.. அவன் குறைஞ்சது 20,000 ஐடி-யாவது ஆர்கானிக்கா உருவாக்கி வச்சிருக்கான்.. அதெல்லாம் பெரிய வேலை..
இந்த பக்கம் ஒட்டுமொத்தமா சேர்த்தா கூட அவனுங்க பக்கத்துல போகவே முடியாது..
இதை அமைப்பு ரீதியா செய்யணும். பணம், கட்டமைப்பு எல்லாமே இதுக்கு அவசியம். திமுக இதை கணக்கில் எடுத்துக்கிதான்னே தெரியல..
1d
Reply
Durai Manigandan
நீங்கள் சொல்வது ஒரு வகையில் உண்மைதான்.
 ஆனால் பல தலித் இயக்கத்தினர் கொட்டாத வன்மம் இல்லை. அதிமுக என்றால் அமைதியாய் கடந்து போவதும் திமுக என்றால் நாலு பக்கத்துக்கு வியாக்கியானம் பேசுவதுமாய் இருக்கிறார்கள்
பல தலித் எழுத்தாளர்கள்/ஆளுமைகள். நேற்று கூட ஒரு மார்க்சிஸ்ட் கடவுள் இல்லைனு சொல்லி காசுபார்த்த பெரியாரிஸ்டுகள்னு பதிவு போடுறார்.
எதிர்வினையாற்றமால் வேடிக்கை பார்க்க முடியுமா? We have an operational problem. But can be fixed at some level.

பீமா : Durai Manigandan இப்போ சொல்றீங்களே எதிர்வினை ஆற்றாமல் இருக்க முடியுமா .. அந்த வேகம் ஏன் சங்கிகளிடம் பம்முகிறது அதான் கேள்வி ..

Durai Manigandan : பீமா நான் சங்கிகளை வெளுப்பவன். அது இங்கிருக்கும் மற்றவர்களுக்கு தெரியும் சங்கிகள் புற்றுநோய் போன்றவர்கள். அவர்களால் என்றும் நல்லது செய்ய முடியாது..

Siva : தலித் உரிமை பேசுவர்கள், தலித் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் திமுகவை எதிர்த்து கருத்து சொல்கிறார்கள் என்ற ஒரே கருத்திற்காக 'நீலசங்கி' ன்னு சொல்லி சுயஇன்பம் அடைந்தார்கள். இப்போதுவரை இந்த அயோக்கியத்தனம் தொடர்கிறது.

Jeyaganapathi V : ம்ம்ம்ம் அப்பறம் பிரேம்...

பீமா :  Jeyaganapathi V பதில் சொல்லு

Jeyaganapathi V : ம்ம்ம்ம் அப்பறம் பீமா

Arun Prasath : TRB Raja... 😂
என் வாய் வேற சும்மா இருக்காது...

Ramasamy Chandran :  மிக முக்கியமான, உண்மையான பதிவு!

Pari :டி.ஆர்.பி.ராஜாவால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது...

வீரா.ஞானபாரதி : அதேதான்... உண்மையான பதிவு...

Senthil Agilan  : Itwing ஆளா சொல்றேன்; மேற்கண்டவை தான் உண்மை.

Shyjin Abraham :  நம்ம வாய் கூட சும்மா இருக்காது

அருண் குமார் தமிழ்நாடு : முக்கியமான ஆளை விட்டுட்டு இவ்ளோ பெரிய ரைட் அப் போட்டு வச்சிருக்கீங்களே ?

இரா இளந்தமிழன் : நமக்கு நிறைய வேலை இருக்கே பிரேம்... இவ்வளவு பெரிய ரைட்அப் எழுதிட்டு இருக்கீங்க...

Lalithavel Jagan : அதே அதே! காவிகள் சுற்றி வளைத்துவிட்டார்கள். இப்போ குய்யோ முறையோன்னு கத்தவும் முடியாம தவிக்கிறாங்க பாவம்.

VenkatRam : இவ்ளோ பெருசா கம்ப்ளைண்ட் எழுதிட்டு கடைசில அவங்க ஓனர்கிட்டயே கொடுத்துருக்கீங்களேண்ணா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக