திங்கள், 13 நவம்பர், 2023

தீபாவளி கொண்டாட்டமும் Parallel society கோட்பாடும்!

May be an image of 1 person

Annesley Ratnasingham !...."Parallel Gesellschaft" என்ற "Parallel society" யை உருவாக்குவது அல்லது ஏற்கனவே உருவாக்கி இருக்கும் "Parallel society" குணாம்சங்களை வலுவடைய செய்வது சமூகத்துக்கு பெரிய கேடாக அமையும் !
."தீபாவளி" என்ற திருநாள் 15 ம் நூற்றாடுகளில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதாக சில தகவல்கள் சொல்கிறது ..
அந்த கொண்டாட்டம் சரியா பிழையா தெரியாது..
எமக்கு புத்தி தெரிந்த  காலத்தில் இருந்து பழக்கப்பட்ட ஒரு நிகழ்வு ...
ஆனால் தற்போது கடந்த 10,15 வருடங்களாக வாழ்த்தை சொல்லலாமா அதனால் விமர்சனத்துக்கு உள்ளாவோமா என்ற அச்சம் கடுமையாக வருகிறது...
அனைத்து  மத திருநாட்களையும் நாம் ஆராட்சி செய்து கொண்டாட முயல்வோம் ஆனால் அனைத்திலும் பல விமர்சனங்களும் ,கற்பனை கதைகளும் உண்டு .


.போறபோக்கை பார்த்தல் இந்த தீபாவளி திருநாளை சிங்கள மக்கள் விரைவில் தமதாக்கி கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை உண்டு ..
இந்த Parallel Gesellschaft என்ற Parallel society என்ற சொல்லை உருவாக்கியவர் ஒரு ஜெர்மானியர் ..Sociologist "Wilhelm Heitmeyer" என்ற அறிஞ்சர் ...
Parallel society என்பது மிகவும் பிற்போக்கு தனமானது ..
இந்த Parallel society theory முற்றாக செயல்படுவது தமிழ் மக்கள் மத்தியில் தான் எனலாம் .இந்த Parallel society விடயத்துக்குள் தான் சாதிய கோட்ப்பாடும் அடங்கும்..
.
ஆனால் அதற்காக சாதிய கட்சிகளையோ அல்லது சாதியம் பிரதிபலிக்கும் அமைப்புகளை உருவாக்கி செயல்படுவதும் இந்த Parallel society என்பதுக்குள் அடங்கும் ...
சாதி வெறி அல்லது சாதீய பாகுபாட்டுக்கு எதிராக கடுமையாக வேலை செய்யவேண்டும் ஆனால்  அதன் பெயரில் அமைப்புகள் வைத்து செயல்படுவது இந்த Parallel society என்ற விடயத்துக்குள் சென்றுவிடும்.
.
Segregation அல்லது தம்மை தாமே தனிமை படுத்திக்கொள்ளல் மிகவும் பிழையான   ஒன்று ..

.தமிழ் மக்களை மிகவும் பாதிக்கும் விடயம் இந்த Parallel society theory என்று நினைக்கிறன் ..

தாம் மற்றவர்களைவிட வேறுபட்டவர்கள்  என்பது மாத்திரம் அல்ல தாம் மற்றவர்களைவிட மிகவும் சிறப்பானவர் என்ற மனா அழுத்தம் உண்டு.
.இது சாதிகள் இடையேயும் உண்டு ..பிரதேச வேறுபாடுகளில் உண்டு ...Tribalism என்பதும் இதில் அடங்கும் ...
சில சொற்களை தமிழில் மொழிபெயர்க்காதையிட்டு வருந்துகிறேன் .....
இதை பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்
.நன்றிகள் ..
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக