செவ்வாய், 28 நவம்பர், 2023

உத்தரகான்ட் சுரங்க விபத்து மோடி அரசின் இன்னொரு இமாலய குற்றம்!

 இம்சை அரசி தென்றல்   :  உத்ராகன்ட் சுரங்கபாதை விபத்துக்கு காரணம் யாருன்னு‌ தெரியுமா?
ஒரு பனவ்த்தி இருக்கே‌ அதே பீடைதான்.
சார்தம் யாத்ரானு இருக்கு.
அதாவது‌ நான்கு முனைகளில்‌ இருக்கும் புண்ணியஸ்தனங்களுக்கு‌ செல்லும் யாத்திரை.
வடக்கே பத்ரிநாத், தெற்கே ராமேஸ்வரம், மேற்கே துவாரகா மற்றும் கிழக்கே ஜகத்நாத்‌. இதற்கு ஒரு ஷார்ட் கட் உத்ராகன்ட்டுக்குள்ளேயே இருக்கு.
அது யம்னோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் என்ற நான்கு இடங்களுக்கும்‌ போனால்‌ அது‌வும்‌ ஒரு சார்தம் யாத்ராதான்.
சார்தம்முக்கு போகும் பக்தர்களின் பயணதூரத்தை 26 கிமீ கள் குறைக்கத்தான் இப்போது 41 தொழிலாளர்கள் மாட்டிக்கொண்ட சுரங்கப்பாதை போடப்படுகிறது.


சுரங்கம் போடுவதற்காக நூற்றுக்கணக்கான வீடுகள் இடிக்கப்பட்டன.
நிலச்சரிவு மற்றும் பூகம்பங்கள்‌ வரும் ஆபத்துள்ள பகுதிகள் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்.
இவற்றை கருத்தில்‌ கொண்டு உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் தொடரப்பட்டன.
அதைதொடர்ந்து நீதிமன்ற அறிவுரைகள் என‌ எதையும் கருத்தில்‌ கொள்ளாமல்‌ இது "பீடை"யின் ஆம்பிசியஸ் ப்ராஜெக்ட்‌னு ஆரம்பித்து விட்டனர்.
இப்போது யம்னோத்ரி‌ போகும் வழியில் கட்டப்பட்டு வந்த இந்த 4.5 கிமீ‌ சுரங்கம் நுழைவாயிலுக்கு அருகே‌ விழுந்து நொறுங்கிவிட்டது. சுமார்‌ 200-250 மீட்டருக்கு அடைத்திருக்குனு சொல்றாங்க. காங்கிரீட், இரும்புக்கம்பிகள் மற்றும் சுரங்கம்‌ தோண்டும் மிசினும் மாட்டியிருப்பதால்‌ துளைபோடுவதில்‌ சிக்கல் மேல்‌ சிக்கல் வந்துகொண்டே‌ இருப்பதாக ரெஸ்கியூ டீம்‌ சொல்லிட்டே இருக்காங்க.

இவ்வளவு ஆபத்து நிறைந்த இடத்தில்‌ ஒரு அவசர‌ எக்சிட் கூட இல்லாதது அரசின் தவறுனு இப்பதான் பேசறாங்க.
விழுந்தது 12ம்‌ தேதி. இப்போது 25ந்தேதி. 13 நாட்கள். இதோ, அதோ‌னு‌ சொல்றானுக. ஆனால்‌ இன்னும்‌ மீட்டபாடில்லை.
இமயமலை சாரல்களில் குடைந்து ரோடு போடுறானுக. கேட்க நாதியில்ல. ஆனா இங்க பூவுலக‌ பூமர் சங்கிகளை பொறை போட்டு வளர்த்து நமது வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் தடுக்கும் வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்கிறார்கள்.

ஒரு கேள்வி: உத்ராகண்ட் விபத்து உலகம்‌ முழுதும்‌ பேசுபொருளாகிவிட்டது.
தாய்லாந்து சுரங்க விபத்து, மீட்புப்பணி‌ நினைவில் இருக்கா?
அதைவிட அதிகமாகவே இந்த விபத்து பரவியிருக்கு.
அதே மீட்பு‌ குழுவை சேர்ந்தவர்கள் வருகிறார்கள்‌னு‌ சொல்றாங்க.‌
யாரோ‌ வந்து எப்படியாவது காப்பாத்துங்கப்பா. உலகமே பேசும்‌ விபத்தை பற்றி‌ ஏன் தமிழ்‌ ஊடகங்கள்‌ இவ்வாறான தகவல்களுடன் பேசவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக