வியாழன், 23 நவம்பர், 2023

தெலங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்! கருத்து கணிப்பில் தகவல் !

Kalaignar Seithigal - Praveen : தெலங்கானா தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் அங்கு காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதே நேரம் அங்கு பாஜக சொற்ப இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் வந்த தேர்தல் கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல தேர்தல் கணிப்பு நிறுவனமான லோக்போல் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 69 முதல் 72 இடங்களைப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல ஆளும்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, 36 முதல் 39 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை பறிகொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரம் பாஜக வெறும் 2 முதல் 3 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 5 முதல் 6 இடங்களை பெரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக