வியாழன், 23 நவம்பர், 2023

டெல்லியில் சிறுவன் கொலை வெறியாட்டம்! குத்தி கொன்றுவிட்டு டான்ஸ் ஆடிய 17 வயது சிறுவன்

வெறும் பிரியாணிக்காக கொன்று, வெறித்தனமாக டான்ஸ் ஆடிய சிறுவன்

மாலை மலர் : குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரங்களில் இந்திய தலைநகர் புது டெல்லி முன்னணியில் உள்ளது.
தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ளது வெல்கம் காலனி. இப்பகுதிக்கு அருகில் உள்ள ஜஃப்ராபாத் (Jafrabad) பகுதியில் வீட்டு பணி செய்யும் ஒரு பெண்ணின் 17 வயது மகன், வெல்கம் காலனி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தான்.
அங்குள்ள ஜன்தா மஜ்தூர் (Janta Mazdoor) காலனி அருகே அவன் செல்லும் போது, ஒரு 16 வயது சிறுவன் அவனை வழி மறித்து பிரியாணி உண்பதற்காக ரூ.350 கேட்டு தகராறு செய்தான். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.


அப்போது கோபமடைந்த அந்த 16 வயது சிறுவன், பணம் தர மறுத்த சிறுவனின் கழுத்தை நெரித்து மயக்கமடைய செய்தான். இரு புறமும் வீடுகள் உள்ள குறுகலான சந்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்த 17 வயது சிறுவனின் உடலை இழுத்து வந்து போட்டான்.

அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் தன்னிடம் உள்ள கத்தியால் பணம் தர மறுத்த சிறுவனின் கழுத்து, காது, முகம் என பல இடங்களில் சரமாரியாக குத்தினான்.

அவ்வப்போது குத்துவதை நிறுத்தியவன், அந்த இடத்திலேயே வெறி பிடித்தவனை போல் நடனமாடினான். அவனை பிடிக்க சென்றவர்களை அவன் கத்தியை காட்டி பயமுறுத்தினான்.

பிறகு அவன் நகர்ந்து செல்ல முற்படும் போது குத்துபட்ட சிறுவனின் தலை சற்று நகர்ந்தது. இதனை கண்டு மீண்டும் திரும்பி வந்த 16 வயது சிறுவன், ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை குத்தி, இறப்பதை உறுதி செய்து கொண்டு அதன் பிறகே அங்கிருந்து சென்றான்.

இந்த குரூரமான கொலை சம்பந்தமான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் படமாகியது. சுமார் ஒன்றரை நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சிகளில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட முறை அவன் வெறித்தனமாக குத்தி கொல்வது படமாகி உள்ளது.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு, கத்தி குத்து பட்ட சிறுவனை ஜிடிபி மருத்துவமனைக்கு (GTB Hospital) கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் 60 முறைக்கும் மேல் அவன் குத்து பட்டிருப்பதாகவும், வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக டெல்லி வடகிழக்கு துணை ஆணையர் ஜாய் டர்கி (Joy Tirkey) தெரிவித்துள்ளார்.
தற்போது வரை இரு சிறுவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக