வியாழன், 2 நவம்பர், 2023

வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி

tamil.indianexpress.com : வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 Vanathi Srinivasan | corona infection | பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவியும்,  கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்தப் பாதிப்பு காரணமாக அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை குறித்து தற்போதுவரை எந்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு கோவை திரும்பிய நிலையில், நேற்று (அக்.31) அவர் உடல் பரிசோதனை செய்து கொண்டார். இன்று அதன்  முடிவு வெளியானது.

அப்போது வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்று பிற்பகல் கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சூழலில் லேசான தொற்று காரணமாகவே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக