சனி, 4 நவம்பர், 2023

6.4 magnitude hit Nepal டெல்லியில் நில அதிர்வு.. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம்.. வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள்

tamil.oneindia.com  - Mani Singh S : டெல்லி: டெல்லியில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான நில அதிர்வு உணரப்பட்டதால், டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சண்டிகாரிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சண்டிகாரிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாவே அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.
Strong tremor felt in Delhi and nearby cities after an earthquake of 6.4 magnitude hit Nepal
கடந்த மாதம் 3 ஆம் தேதி டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தஞ்சம் அடைந்தனர்.
நேபாளத்தில் 6.2 என்ற அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டு இருந்தது.

அதன்பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதியும் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, குருகிராம், கசியாபாத் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. டெல்லியில் ஏற்படும் தொடர் நில அதிர்வால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக