ஞாயிறு, 29 அக்டோபர், 2023

கேரளா ஜெஹோவா வழிபாட்டு கட்டிடத்தில் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டின் ஒப்புதல் வாக்குமூலம்

 கேரளா ஜெஹோவா சாட்சிகளின் வழிபாட்டு கட்டிடத்தில் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டின் என்பவரின் ஒப்புதல் வாக்குமூலம்
Mr. Domenic Martin, who has dropped Bomb in the Jehovah Witness convention center in Kerala is sharing the reasons behind the bombing!
Raj Dev : கேரளத்தில் குண்டு வெடித்துள்ளது கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் அல்ல;
ஜெகோவா சாட்சிகள் ஜெபக்கூடம் ஒன்றில்.
ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ ஜெபக்கூடம் என்றே எழுதி வருகின்றன.
ஜெகோவா சாட்சிகள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைப்பதை விரும்பாதவர்கள்.
குண்டு வைத்ததாக சரணடைந்துள்ள டொமினிக் மார்ட்டின் ஒரு முன்னாள் ஜெகோவா சாட்சி.
குண்டு வைத்ததை விளக்கி அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ஆபத்தான ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பேசியுள்ளான்.

ஜெகோவா சாட்சிகள் தேசிய கீதத்தை ஏற்காதவர்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு உள்ளது.


மேலும் மோடிக்கு விண்ணப்பமும் உள்ளது.
கேரளாவில் ஏற்கனவே ஜெகோவா சாட்சிகள் தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்தது.
பள்ளிக் குழந்தைகள் இரண்டு பேர் தேசிய கீதம் பாடவில்லை என்று அவர்களை பள்ளியில் இருந்து நீக்கியது கேரளப் பள்ளிக்கூடம் ஒன்று.

அக்குழந்தைகள் ஜெகோவா குழுவை சேர்ந்தவர்கள்.
பின்னர் அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று,
தீர்ப்பு ஜெகோவா குழுவினருக்கு ஆதரவாக வந்தது.
தமிழ்நாட்டிலும் கடந்த ஆண்டு தர்மபுரியில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை ஆகஸ்ட் 15,
சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வரவில்லை என்று சங்கிகள் பிரச்சினைப்படுத்தினர்.

அவரும் ஜெகோவா சாட்சிகள் குழுவை சேர்ந்தவர்.
ஆனால் அவர் தொடர்பான செய்திப் பதிவுகளிலும் பள்ளி ஆசிரியை கிறிஸ்தவர் என்றே ஊடகங்கள் எழுதின.

ஜெகோவா சாட்சிகள் இயேசுவின் தனிச்சிறப்பான இடத்தை மறுப்பவர்கள்.
கிறிஸ்மஸ் கொண்டாட மாட்டார்கள்.
கிறிஸ்தவத்தின் மும்மைக் கொள்கையை மறுப்பவர்கள்.
அதனால் அவர்கள் கிறிஸ்தவர்கள் இல்லை.

அதே நேரம் ஜெகோவா சாட்சிகளின் இறுக்கமான கொள்கைகள் காரணமாக ஒரு பெருமதமாக வளர்வதற்குரிய சூழல் இல்லை.

ஆனால் அதை கூடப் பொறுத்துக் கொள்ளாதது ஆர்.எஸ்.எஸ். சங்கி மனநிலை அல்லாமல் வேறென்ன?

 ஒரு சமூகத்தில் வித்தியாசமான கொள்கைகளை உடைய மனிதர்கள் ஆச்சரியத்துக்குரியவர்கள்.
கேரள சமூகத்தின் ஜனநாயக வெளியே அங்கு ஜெகோவா சாட்சிகள் கணிசமாக இருப்பதற்கு காரணம்.

சென்னையிலும் ஜெகோவா சாட்சிகள் சபைகள் சில இடங்களில் உள்ளன.
ஜனநாயக உணர்வு என்பது ஒரு பூந்தோட்டத்தின் பல வண்ண மலர்களை ரசிப்பது போன்றது.
கேரள சமூகத்தில் ஜனநாயக உணர்வை உறுதிப்படுத்த வேண்டியது அங்குள்ள அரசாங்கம் மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக