புதன், 4 அக்டோபர், 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மனியில் கொடுத்த அதிரடி பேட்டி

 Annesley Ratnasingham ஜெர்மனி : .ரணில் DW என்ற Deutsche Welle என்று ஜேர்மனிய ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் போது அவர்களை அவமான படுத்திவிட்டாராம் என்று பலர் மனம் வருந்துகிறார்கள்.
அவர்களுடன் சேர்ந்து தம்மை ஊடகவியலாளர்கள் என்று தம்மைத்தாமே புகழும் சிலரும் இணைந்திருக்கிறார்கள் .
ஒரு  journalism என்றால் என்ன என்று தெரியாத அதைவிட investigative journalism என்றால் ஒரு அமைச்சர் எந்த பெண்ணுடன் இரவில் சாப்பிடுகிறார் என்று நினைக்கிறார்கள் .May be an image of 1 person and text that says 'Daily Ceylon NEWS "You think we are second class..?" சர்வதேச நேர்காணலில் தலைகுனியாத பேச்சு'
ரணிலின் ஜெர்மனிய Deutsche Welle வுடன் நடந்த சம்பாஷணையை மட்டும் விமர்சிக்கும் இவர்கள் அதே ரணில் "Berlin Global Dialogue" என்ற கூட்டத்தில் பேசிய விடயங்கள் பற்றி ஒரு சொல்கூட பேசுவதில்லை .
அந்த பேச்சை உங்களால் முடிந்தால் நீங்கள் விமர்சித்தாவது உங்கள் முகநூலிலோ அல்லது உங்கள் பத்திரிகையிலோ வெளியிட்டு இருக்கலாம் .


ஜெர்மனிய பல பத்திரிகைகள் ரணில் அவர்களின் பேச்சை மிக சிறந்த பேச்சு என்று விமர்சித்து இருகிறார்கள் .
சரி இப்போது Deutsche Welle என்ற ஊடகம் யார் என்று பார்ப்போம் ..
Deutsche Welle என்பது ஜெர்மனிய அரசின் ஒரு ஊடகம் ,அதன் தலைவர் Peter Limbourg என்பவர் .
இந்த Deutsche Welle என்ற ஊடகம் உள்நாட்டிலும் ,வெளிநாடுகளிலும் பல சர்ச்சைகளை சந்தித்த ஊடகம்.
70 வருடங்களின் முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வெளிநாடுகளில் செய்திகளை சேகரிக்கும் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் ஒரு ஊடகமாகும்.
அண்மையில் யூதர்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டதாக 5 செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் .
அதேபோன்று ரணில் அவர்களை பேட்டி காணும்போதும் Channel 4 பற்றி வியாபித்ததுடன் தான் பிரச்சனையே ஆரம்பித்தது .
.
ஒரு ஜெர்மனிய அரச ஊடகம் Channel 4என்ற தனியார் மற்றும் எந்த விதமான ஊர்ஜீதமும் அற்ற செய்திகளை போடும் ஊடகத்தின் கதையை ஒரு நாட்டின் ஜனாதிபதியை கேட்பது அவரை அவமதிப்பதாகும்.
.
Channel 4 தாம் கூறிய விடயங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லிய பின்பும் அந்த செய்தியை மூலதனமாக வைத்து பேசுவது ஒரு ஊடக வறுமையே .
.
நிச்சயம் இந்த ஊடகவியலாளருடன் Channel 4 தொடர்புகொண்டு lobby பண்ணி இந்த காரியத்தை செய்திருக்கவேண்டும் ..
.இந்த ஊடகவியலாளருக்கு நிச்சயம் இங்கு ஒரு விசாரணை உண்டு .
.
.இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் பக்கத்து வீட்டு வேலிக்கை நிண்டுபாத்து எழுதுவதை விட்டு..!!
.
ஆராய்ச்சி பண்ணி ஆங்கிலமொழியையும் கருத்தில் எடுத்து ரணில் அவர்களுடைய "Berlin Global Dialogue"இல் அவர் பேசிய பேச்சை கேட்டு அதை ஆதரித்தோ அல்லது விமர்சித்தோ ஒரு கட்டுரையை எழுத முடியுமா ??

.தேசம் நெட் : சனல் 4 ஊடகத்தினை ஏன் புனிதமாக கருதுகின்றீர்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சீற்றத்துடன் ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். டிடபில்யூநியுஸ் உடனான பேட்டியின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்தஞாயிறுதாக்குதலில் ஈடுபட்டவர்களிற்கும் அரசாங்க உறுப்பினர்களிற்கும் தொடர்புள்ளதாக சனல் 4 வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து செவ்விகாண்பவர் கேள்வி எழுப்பிய வேளையே ரணில் விக்கிரமசிங்க சீற்றமடைந்தார்.
நீங்கள் ஏன் சனல் 4 புனிதமானது என கருதுகின்றீர்கள்  என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு செய்தியாளர் நான் அவ்வாறு செயற்படவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து பிரிட்டனில் பலர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் ஏன் நீங்கள் சனல் 4னை மாத்திரம் கருத்தில் கொள்கின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு செய்தியாளர்உறுதியான வலுவான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என தெரிவித்தமைக்கு ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன என்பதற்காக நான் எதனையும் செய்ய முடியாது என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்- சிஐடியின் முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஏன் அது பற்றி கேள்வி எழுப்பகூடாது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்புகின்றது உங்களுடன் பணிபுரிந்த முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்புகின்றார் என்ற குற்றச்சாட்டிற்கு நீங்கள் அதனை முதலில் என்னிடம் கேட்கவில்லை நான் கேள்வி எழுப்பிய பின்னரே கேட்கின்றீர்கள் நீங்கள் சனல் 4 அறிக்கை முற்றிலும் உண்மையான விடயம் என்பது போல என்னிடம் கேள்வி எழுப்பினீர்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக