ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மனித குலத்திற்கு எதிரானது சனாதனம்.. காந்தியை சுட்டு கொன்றது இந்துத்வா” : திருமாவளவன் MP ஆவேச பேச்சு !

 Kalaignar Seithigal - Prem Kumar : நாம் அனைவரும் மனித குலத்திற்கு எதிரான சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டும். சனாதனத்திற்கு எதிரான கோட்பாடே கம்யூனிசம். கம்யூனிசத்திற்கு எது எதிரானதோ அதுவே சனாதனம் என்று திருமாவளவன் குறிப்பிட்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 'சனாதன ஒழிப்பு' மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், சனதான பாசிஸ்டுகளுக்கு எதிராக இது போன்ற மாநாடுகளை நடத்துவது தமிழகத்தின் சிறப்பு மற்றும் பெருமைக்குரிய விஷயம்.

இந்தியா முழுவதும் சனாதனத்தை எதிர்த்து குரல் எழுப்புவர்கள் இருந்தாலும் ஒரு மாநிலமே சனாதனத்திற்கு எதிராக குரல் எழுப்பும் சிறப்பு தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு என தெரிவித்தார்.மேலும், சனாதனத்தை எப்படி புரிந்து கொள்வது என்றால், ஒரு வரியில் சொல்லலாம் பிறப்பின் அடிப்படையிலான உயர்வு, தாழ்வு என்பது, மாறதது என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது சனாதனம் என தெரிவித்தார்.
“மனித குலத்திற்கு எதிரானது சனாதனம்.. காந்தியை சுட்டு கொன்றது இந்துத்வா” : திருமாவளவன் MP ஆவேச பேச்சு !

மேலும், நாம் அனைவரும் மனித குலத்திற்கு எதிரான சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டும். சனாதனத்திற்கு எதிரான கோட்பாடே கம்யூனிசம் என்றும், கம்யூனிசத்திற்கு எது எதிரானதோ அதுவே சனாதனம் என்றும் குறிப்பிட்டார்.

ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் என மூன்றையும் அடிப்படையாக கொண்டது தான் சனாதனம் என்றும், இந்த மூன்றையும் அடியோடு எதிர்ப்பது கம்யூனிசம் எனவும் தெரிவித்தார்.மேலும், இந்துத்வா என்பது சன்-பரிவார்களின் அரசியல் கோட்பாடு என்று தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், பா.ஜ.க உள்ளிட்ட சன்பரிவார்களின் வெறுப்பு அரசியலை பிரகடனம் செய்வது தான் இந்துத்துவா கொள்கை என்றும் இந்திய அரசியல் சட்டத்தை சிதைப்பது இந்துத்துவாவின் கொள்கை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிவன் நம்பிக்கை உள்ளவர்களோ, அல்லது திருமால் நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் பைபிளயோ, மசூதியையோ எரிக்க சொல்லமாட்டார்கள். ஆனால் இந்துத்வா கொள்கை உடையவர்கள் தான் அதை செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.
“மனித குலத்திற்கு எதிரானது சனாதனம்.. காந்தியை சுட்டு கொன்றது இந்துத்வா” : திருமாவளவன் MP ஆவேச பேச்சு !

காந்தி கொண்டிருந்தது இந்துயிசம் என்றும், அதி தீவிரமான ராம பக்தரான காந்தியை சுட்டு கொன்றது இந்துத்துவா கொள்கையை உள்வாங்கி வளர்க்கப்பட்ட நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார்.ராம பக்தரனா, காந்தி மதசார்பின்மையை கொண்டிருந்தார் என்றும், காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோர் மதசார்பின்மை என்ற ஒரே நேர்கோட்டில் பயணித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மிசா காலத்தில் இந்திரா காந்தி பெரும் நெருக்கடியை நாட்டு மக்களுக்கு கொடுத்திருந்தாலும் நாம் காங்கிரஸ் கட்சியை ஏன் ஆதரிக்கின்றோம் என்றால் அதே காலகட்டத்தில், அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி இந்தியாவின் இறையான்மை, மதசார்பின்மையை உறுதிபடுத்தியவர் இந்திரா காந்தி என்று திருமாவளவன் குறிப்பிட்டார்

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதும்போது அதை எதிர்த்த ஒரே கும்பல் இந்த சன்-பரிவார் தான் என்றும், இத்தனை சனாதன கொடுமைகளையும் செய்யும் பார்ப்பனர்களை ஒபிசி சமூகத்தினர் எதிர்க்கமால் எஸ்.சி/எஸ்.டி மக்களை பகையாக நினைத்து அவர்களை ஒடுக்குவதே இன்றைக்கும் சனாதனம் வேரூன்றி இருப்பதற்கு காரணம் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக