சனி, 12 ஆகஸ்ட், 2023

கோயில் திருவிழாக்களில் அலகு குத்துதல் மற்றும் துலாக் காவடி எடுத்தவர்கள் ...சீழ் பிடித்து ஆபத்தை

 Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :  சாணி மிதிச்ச செருப்பை முதுகிலை வைச்சிட்டாங்களோ?
இப்பிடி அப்பிக்கிடக்கு?  யோசிக்க வைக்குதோ?
தெய்வ குற்றமாகிவிடும்  கவனம்!!
சென்ற வாரம் குறைந்து பத்துப் பேராவது இத்தகைய காயங்களுடன் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள்!
"நான் குடுத்த மூளையை சரியாக பயன்படுத்தாதற்காக நான் குடுத்த தண்டனை" என்று கடவுள் உங்களை தண்டிச்சிருக்கிறார் போலை என நான் சொன்னதும்,
அவர்களில் பலர் ஒன்றும் புரியாது விழித்தார்கள்.!
முதுகில் மாத்திரமின்றி கெண்டை தசைகளிலும் (calf muscles) , இத்தகைய சீழ் பிடித்த காயங்கள்!

சீழ் பிடிக்கும் வேதனை மட்டுமின்றி ஏற்புநோய் வந்து முக்தியடையும் வாய்ப்புக்களும் குறைவில்லை!
ஆம் இவை எல்லாம் கோவில் திருவிழாக்களில் நேர்த்திக் கடனுக்காக துலாக் காவடி ஆடியவர்கள்.
"நல்லதைச் செய், மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காதே, நேர்மையாக நட கபட நடவடிக்கைகளில் ஈடுபடாதே"
இதைத் தானே கடவுள் விரும்புவார்>?
அதை விடுத்து இத்தகைய மூட நடவடிக்கைகளில் ஈடு பட்டால் தண்டனைதானே குடுப்பார்.
அதைத்தான் கொடுத்திருக்கிறார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக