புதன், 23 ஆகஸ்ட், 2023

அதிமுக திமுகவுடன் இணையும்! எடப்பாடி அடி தாங்கமாட்டார் -ஆர்எஸ் பாரதி ஒரே போடு

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali : சென்னை: அதிமுக தங்களின் பங்காளி எனவும் விரைவில் அவர்களும் தங்களுடன் இணைவார்கள் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்து இருக்கிறார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் நடிகர்கள் பற்றி எந்த ஒரு கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. நாம் ஏதாவது பேசினால் அதனை திரித்து கூறுவார்கள். இன்னும் ஒரு ஆறு மாத காலம் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்,
நாடாளுமன்ற தேர்தல் வரும். அப்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு போவார் என்பது தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு "புரட்சி தமிழர்" என்று பட்டம் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் எம்ஜிஆர் ஒரு மலையாளி, ஜெயலலிதா ஒரு கன்னடத்தவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது எம்ஜிஆர், ஜெயலலிதாவை காட்டிக் கொடுப்பது போல் உள்ளது. நீட் தேர்வு வந்ததற்கும் அது நடத்தப்பட்டதற்கும் காரணமே எடப்பாடி பழனிசாமி தான். நாங்கள் அதிமுகவை அழிக்க நினைக்கவில்லை. அவர்கள் எங்கள் பங்காளி. நாங்கள் அனைவரும் எல்லாம் ஒரே பிராண்டு. பாஜக மற்றும் அண்ணாமலை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பார்.

முதல்முறையாக நாடார் சமூகத்தை சேர்ந்தவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக்கினோம்! ஆளுநர் ஏற்கவில்லை: ஆர்எஸ் பாரதி முதல்முறையாக நாடார் சமூகத்தை சேர்ந்தவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக்கினோம்! ஆளுநர் ஏற்கவில்லை: ஆர்எஸ் பாரதி

டெல்லியில் இருந்து அடித்துக்கொண்டே இருந்தால் எடப்பாடி பழனிசாமி எவ்வளவுதான் தாங்குவார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை எதிர்க்க எந்த கட்சியாலும், நபராலும் முடியாது என பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. எங்களுக்கு பாஜகதான் பகையாளி. எதிர்காலத்தில் அதிமுகவினர் கூட எங்களோடு வந்து இணைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக