ராதா மனோகர் : உங்கள் குப்பையை இங்கே கொட்டாதீர்கள் என்று மலேசியாவில் கூறுவது ஒரு வராலாற்று நீட்சிதான்!
யாழ்ப்பாணத்தில் அந்த காலத்தில் ஒரு பிரபலமான பழமொழி இருந்தது .. இப்போதும் வழக்கத்தில் ஓரளவு இருக்கிறது!
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது அவர் யார் யாருக்கு உறவினர் என்று விசாரித்து கொண்டிருக்கும் பொழுது அவர் இவரின் ஒன்றுவிட்ட சித்தப்பா
இவர் அவரின் மாமியாரின் பெரியம்மா
என்பது போல அவை இருக்கும் இந்த இடத்தில் தவிர்க்கவே முடியாமல் இருவருமே ..
"சுத்தி சுத்தி பார்த்தால் சுன்னாகத்து பறையனும் சொந்தமாவான் அல்லது சுத்தி சுத்தி பார்த்தல் சுன்னாகத்து பள்ளனும் சொந்தமாவான்" ..என்று சிரித்து பரஸ்பரம் கூறிக்கொள்வார்கள்
இந்த பழமொழியின் வரலாறு தேடி பார்த்தபொழுது
சுன்னாகத்தில் 1926 இல் திராவிட கோட்பாடு நிலைகொண்டிருந்தது தெரிகிறது
திராவிட வித்தியா அபிவிரித்து சங்கம் என்ற அமைப்பு அப்போது சுன்னாகத்தில் தோன்றியது
அந்த அமைப்பின் சார்பாக சுன்னாகம் திராவிட வித்தியாசாலை என்ற பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது முதன்முதலாக அனைத்து ஜாதி குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கப்பட்டது
அதுமட்டுமல்ல சுயமரியாதை கருத்தை வலியுறுத்தி தலையங்கத்திலேயே சுயமரியாதை என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டது திராவிடன் பதித்திரிகை
அந்த காலக்கட்டங்களில் சுமார் நான்கு ஆண்டுகள் சுன்னாகத்தில் இருந்துதான் திராவிடன் பத்திரிகையும் வெளியானது
யாழ்ப்பாணத்தவர்கள் திராவிடம் என்றால் அது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் என்பதை புரிந்து கொண்டுதான்,
இன்று வரை அவர்கள் திராவிடத்தின் மீது அமிலவார்த்தைகளை அள்ளிவீசுகிறார்கள்!
திராவிடத்தின் எதிரிகள் மனிதர்களின் எதிரிகள்
திராவிடம் தங்களின் ஜாதி மேட்டிமையை நொறுக்கி விடும் என்பதால்தான் தோழர் திருமா மீது இந்த அமில வார்த்தைகளை வீசிய மலேசிய சங்கிகள்!
அவர்கள் திராவிடத்தை பார்த்து பயப்படுகிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக