BBC : இந்தியா-இலங்கை இடையே பாலம் அமைக்கும் திட்டத்தால் 'ராமர் பாலம்' சேதமடையுமா?
இந்தியா, இலங்கை, ராமர் பாலம், மோதி, ரணில்பட மூலாதாரம்,PMD SRI LANKA
கட்டுரை தகவல்
எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் :இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் பாலம் ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது இந்த விஷயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தை அமைப்பது உண்மையில் சாத்தியமா? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாலம் அமைப்பதால் 'ராமர் பாலம்' என்று நம்பப்படும் சுண்ணாம்புத் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
அரசியல்ரீதியாக இந்தப் பாலம் அமைக்கும் திட்டம் என்ன மாதிரியான தாக்கத்தை சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும்? பாஜக அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமா? அப்படிச் செய்வதால் இந்தியாவுக்கு என்ன பயன்?
இவை குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இரண்டு நாடுகளையும் இணைக்கும் வகையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்தாலோசித்துள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை மீள ஆரம்பித்தல், விமான சேவைகளை விஸ்தரித்தல், குழாய் மின் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
இதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே தரைவழிப் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கைக்கு இடையே பாலம் அமைக்கும் திட்டம்
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் தொடர்பில் பல ஆண்டு காலமாகப் பேசப்பட்டு வருகின்றது.
இந்த பாலத்தை அமைப்பது தொடர்பில் 2015ஆம் ஆண்டு பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
தனுஷ்கோடி, தலைமன்னார் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 35 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டு வந்ததாக அந்த காலப் பகுதியில் இந்திய ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதற்கான நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அப்போது கலந்தாலோசிக்கப்பட்டிருந்தது.
தெற்காசியப் பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் 2015ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட தருணத்தில் பிரதமர் நரேந்திர மோதி இந்த விடயம் குறித்து அப்போதும் கலந்துரையாடியுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருந்தது என இந்தியாவின் அப்போதைய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அப்போது தெரிவித்திருந்தார்.
தெற்காசிய பிராந்திய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கும் வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அப்போது யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும், அதற்குப் பிறகு அந்தப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதியால் முன்வைக்கப்பட்ட அதே திட்டத்தை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னரும், நரேந்திர மோதி முன்வைத்துள்ளார்.
ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது
இலங்கை, இந்தியாவை இணைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் இயற்கையான வடிவங்கள் ‘இராமர் பாலம்’ அல்லது ‘ஆதாமின் பாலம்’ என அழைக்கப்படுகின்றது.
ராமேஸ்வரம், மன்னார் பகுதிகளை இணைக்கும் வகையில் சுண்ணாம்புக் கற்களால் ஆன இந்த வடிவம் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் கட்டப்படும் என்றால், இந்தப் பாலத்தைச் சார்ந்து அமைக்கப்படுமா அல்லது வேறு விதமாக அமைக்கப்படுமா என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
நிலவியல் ரீதியாக பாலம் அமைப்பது சாத்தியமா?
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியானது, மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் எளிதாகப் பாலம் அமைக்க முடியும் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்.
நிலவியல் ரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது சாத்தியம்தான் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசியரான இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலுள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவானது என்பதால் மிக எளிதாகப் பாலம் அமைக்க முடியும் என்றார்.
சேது சமுத்திர திட்டம் பல ஆண்டுக்காலமாகப் பேசப்பட்டு வருகின்றது. ஆனால், அதிலுள்ள நடைமுறை சவால்களைப் போல் இந்தத் திட்டத்தில் ஏதேனும் சவால்கள் உள்ளனவா எனக் கேட்டபோது "இதில் அப்படியான சவால் ஏதும் இல்லை" என்கிறார் எஸ்.ஏ.நோபர்.
சேது சமுத்திர திட்டம் சாத்தியமில்லை என்ற போதிலும், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் பாலம் அமைப்பது சாத்தியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
''இந்தப் பாலம் அமைப்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதி ஆழம் குறைவானது.
அந்த ஆழம் குறைவான பகுதிகளின் ஊடாக காங்க்ரீட் தூண்களை நிறுத்தி, பாலம் அமைக்க முடியும். இதில் ஒரு பிரச்னையும் கிடையாது. அது பாலம் அமைப்பதற்குச் சாத்தியமான பகுதிதான்,” என்றார் நோபர்ட்.
ஆனால், இது புவியியல் ரீதியாக இலங்கையைப் படிப்படியாகத் தங்களுடைய பிரதேசமாக்குவதற்கான இந்தியாவின் முதல் படி என்றும் கூறினார்.
"தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்," என்று விளக்குகிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட்
“பாலம் ஒன்று அமைக்கப்படும்போது, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் தங்களுடைய கைக்குள் வந்துவிடும். சீனா உள்ளிட்ட பல நாடுகள் கடலுக்குள் பாலங்களை அமைத்துள்ளன.
ஆகவே, தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் மூலம் இது சாத்தியப்படக்கூடிய விஷயம்தான்," என்கிறார் பேராசிரியர் எஸ்.ஏ.நோபர்ட்.
''தனுஷ்கோடியிலிருந்து பாதை அமைப்பது இலகுவானது. அவ்வளவு தூரம் கிடையாது. தனுஷ்கோடியிலிருந்து கடலுக்குள் பாக் நீரிணையின் ஊடாகப் பாலம் அமைக்க முடியும்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் நிரம்பியுள்ளன. அந்தச் சுண்ணாம்புக் கற்களில்தான் தூண்களை இறக்கி பாலம் அமைப்பார்கள். தனுஷ்கோடியிலுள்ள ரயில் பாலத்தைப் போன்றதொரு பாலத்தை அமைப்பார்கள்," என்று அவர் விளக்கினார்.
சுண்ணாம்புக் கற்கள் சேதமாகுமா?
இந்தப் பாலம் அமைக்கப்படும்போது, பாக் நீரிணையில் உள்ள சுண்ணாம்புக் கற்களுக்கு சேதங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதா?
என கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.ஏ.நோர்பட்டிடம் வினவினோம்.
இதுகுறித்து விளக்கமளித்த நோபர்ட், "அது மிகப்பெரிய சுண்ணாம்புத் திட்டு" என்றும் பாலம் அமைப்பதால் அதில் எந்தவித சேதமும் ஏற்படாது எனவும் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாக சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார்.
இந்திய - இலங்கை பாலம் சர்வதேச அரசியலில் தாக்கம் செலுத்துமா?
இந்தியா, இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்கப்படாது என சர்வதேச அரசியல் தொடர்பான செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்புகளை மேற்கொள்ளாது இருப்பதற்கே இந்தியா முயன்று வருவதாகவும் அவர் கூறுகிறார்.
''உண்மையில் பாலம் அமைக்கமாட்டார்கள். இதுவரை படகு சேவைகூட ஆரம்பிக்கப்படவில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனச் சொல்லியிருந்தார்கள். சிங்கப்பூரிலுள்ள ஒரு இலங்கை தமிழருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், இந்திய அரசாங்கம் அதைத் தடுத்தது. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் இடையில் சிக்கல் இருக்கின்றது. இந்த அகண்ட பாரத கோட்பாடு, தேசிய கோட்பாடுகள் இருப்பதால், இதில் முரண்பாடுகள் இருக்கின்றன,” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும், இந்தியாவிற்குமான எந்தவொரு தொடர்பும், இணைந்த வடக்கு, கிழக்கு தாயகத்தோடு இணையக்கூடிய ஒரு தொடர்பாகத்தான் இருக்கும் எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை கூறுகிறார்.
,
பாலம் அமைத்தாலும் கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்புபடுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர்.
பாலம் அமைத்தாலும்கூட தமிழர்கள் தமது தாயகமாகக் கருதக்கூடிய இணைந்த வடக்கு, கிழக்குடன் தொடர்பு படுமே தவிர, அது கொழும்பிற்கும், இந்தியாவிற்குமான தொடர்பாக இருக்காது என்கிறார் அவர்.
அது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கு ஒரு சிக்கல் எனக் கூறும் சதீஷ், “இலங்கை நிறைய திட்டங்களைச் சொல்லியிருக்கின்றது. தலை மன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும இடையில் ரயில் பாலம் இருந்தது. கப்பல் சேவை இருந்தது எனச் சொன்னார்கள்.
காங்கேசன்துறைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான படகு சேவை என இறுதியாகச் சொன்னார்கள். ஆனால், இன்று வரை அனுமதி வழங்கப்படவில்லை. எல்லா அனுமதியும் கிடைத்த பின்னர் இந்திய கப்பல்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
இப்போதும் நாம் நடக்காத விஷயத்தைத்தான் பேசுகிறோம். பாலம் அமைப்பதற்கு இந்திய அரசு விடவே விடாது," எனக் கூறுகிறார் சதீஷ் கிருஸ்ணபிள்ளை.
சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் கொலையில் ஐவர் கைது: தங்கையே அக்காவை கொலை செய்தாரா?
23 ஜூலை 2023
பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா?
பாஜக அரசுக்கு இந்தப் பாலம் அமைக்க விருப்பமில்லையா?
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு பாஜக விரும்பாது எனவும் சதீஷ் கிருஸ்ணபிள்ளை குறிப்பிடுகின்றார்.
'இந்த மாதிரியான பாலங்கள் அமைப்பது என்பது மிகப்பெரிய அரசியல். பிரான்சுக்கும், பிரட்டனுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டது. ஏதோவொரு தொழில்நுட்பத்தின் ஊடாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், இன்று எல்லைக் கட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது.
பிரான்ஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் அந்தப் பாலத்தின் வழியாகச் செல்கின்றார்கள். அது பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், பிரட்டன் அரசாங்கத்திற்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது,” என்று அவர் விவரித்தார்.
ஐரோப்பிய யூனியனை எடுத்துக்கொண்டால், பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இல்லை. அப்படியில்லாத சந்தர்ப்பத்தில் அவர்களின் விசா தயார்படுத்தலை எப்படிச் செய்வது என்ற சிக்கல் இருக்கின்றது.
இந்நிலையில், “உச்ச சக்தி கொண்ட நாடான இந்தியா, பாலம் அமைத்து நாம் அங்கு இலவசமாகச் செல்வதைப் பெரிதாக விரும்பாது. குறிப்பாக பாஜக அரசாங்கம் அதைச் செய்யாது," என்று செய்தியாளர் சதீஷ் கிருஸ்ணபிள்ளை தெரிவிக்கின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக