சுந்தர் சுந்தர் : ஊடகத் துறையினர், இலக்கியவாதிகள், திரைப்படத் துறையினர், முற்போக்காளர்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் கலைஞரை இருட்டடிப்பு செய்வதிலும் நக்கல் செய்வதிலும் நைச்சியமாக அவரை வில்லனாக கட்டமைப்பதிலும் வெற்றி பெற்றனர்.
ஆனால் அவர்களுக்குதான் கலைஞரும் கலைஞருக்கு பின்வந்தவர்களும் வீடு வழங்கினர்!
ஒருகட்டத்தில் கலைஞரை நக்கல் நய்யாண்டி செய்தால்தான் முற்போக்காளர்/இலக்கியவாதி பட்டமே கிடைக்கும் என்ற சூழல் நிலவியது. ஜெயமோகன் என்ற கழிசடை கலைஞர் இலக்கியவாதியே இல்லை என்றது. அதனுடைய குட்டிகளும் அதையே வாந்தி எடுத்தன.
மேற்கண்டுள்ளவர்களின் எல்லா தந்திரங்களையும் வன்மங்களையும் மீறிதான் கலைஞர் யாவற்றிலும் வென்று வாகை சூடினார். சாதிவெறியில் ஊறி உடலெங்கும் அரிப்பெடுத்தோர் கலைஞரின் விஸ்வரூபம் கண்டு குமையாத நாளில்லை.
இவ்வகை அரிப்பெடுத்தோரில் கட்டமைக்கப்பட்ட சமூக படிநிலையில் அடிநிலையிலிருந்து மேல்நிலை வரையுள்ள அனைத்து சாதியாட்களும் உண்டு.
எல்லாவற்றிலும் தங்களுக்குள் வேறுபடும் பல்வேறு வகை சாதிவெறியர்கள் கலைஞர் எதிர்ப்பில் மட்டும் ஒரே நேர்க்கோட்டில் வந்துவிடுவார்கள். தாங்கள் அம்பலப்படுவது தெரியாமலேயே நிர்வாணமாக நிற்பார்கள்.
கலைஞரால் பயன் பெற்ற பலர் கலைஞர் முதுகில் குத்துவது வழக்கமென்றாலும் கட்சி பொறுப்பில் உள்ள பலரும்கூட கலைஞர் செய்த நன்மைகளை பெரிதாக மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வதில்லை.
எந்த பொறுப்பும் இல்லாமல் எதிர்பார்க்காமல் கலைஞர் மீது மீளாஅன்பு மட்டும் கொண்டவர்கள்தான் கலைஞர் மீது கட்டமைக்கப்பட்ட கறையை துடைக்க போராடுகிறார்கள். அவர் செய்த நன்மையை பரப்புகிறார்கள். விதிவிலக்காக சில நிர்வாகிகள் மட்டும் கலைஞரின் புகழை பரப்புகிறார்கள்.
இதன் பிறகாவது கலைஞர்/முதலமைச்சர் செய்த/செய்யும் நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க தொடர்புடைய நிர்வாகிகள் முயற்சி எடுக்க வேண்டும். மாண்புமிகு உதயநிதியும் இதில் விதிவிலக்கல்ல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக