சனி, 1 ஜூலை, 2023

பிரான்ஸ் சிறுவனை சுட்டு கொன்றதால் வெடித்த வன்முறை அரசு திணறல்

 tamil.oneindia.com  - Mani Singh S :  பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை
பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை
வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய நேல் என்ற சிறுவன் சென்றான்.


அப்போது அவன் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் சிறுவன் நேல் பலியானான். இந்த சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டின் பல இடங்களில் மக்கள் போராடட்த்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறையாக வெடித்தது. பள்ளிக்கூடங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பிரான்சில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் வலியுறுத்தினார். எனினும் வன்முறை மட்டும் கட்டுக்குள் வந்த பாடில்லை. சுமார் 45 ஆயிரம் போலீசார் அங்கு தீவிர ரோந்த்யு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையில் 100க்கும் அதிகமான போலீசார் காயமடைந்துள்ளனர்.

மேலும் 800 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரீஸ் மற்றும் அதனை சுற்றிய முக்கிய இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் வார இறுதி நாட்களில் வழக்கமாக நடைபெறும் கச்சேரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தையும் நிறுத்தப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்றும் அவர்களை வீதிக்கு வரவிடாமல் வீட்டில் வைத்திருப்பது பெற்றோர்களின் பொறுப்பு எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக திட்டமிட்டு வன்முறைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள மேக்ரான், வீடியோ கேம்கள் வன்முறைக்கும் பெரும் பங்கு வகிப்பதாகம் சாடியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக