செவ்வாய், 4 ஜூலை, 2023

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ அனுமதிக்க பட்டுள்ளார்

மின்னம்பலம் - கவி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இன்று தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சந்திப்பு, அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக மதியம் 3 மணியளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அங்கு அவரை வயிறு சிகிச்சை நிபுணர் மருத்துவர் பழனிசாமி பரிசோதித்து முதல்கட்ட சிகிச்சை அளித்துள்ளார். முதல்வர் எப்போது வீடு திரும்புவார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மருத்துவர் பழனிசாமிதான், முன்னாள் முதல்வர் கலைஞர் வயிறு உபாதை காரணமாக மருத்துவமனைக்கு செல்லும் போது சிகிச்சை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக