வியாழன், 20 ஜூலை, 2023

சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

மாலை மலர்      ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர். சென்னையில், ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் நேற்று இரவு சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடற்கரை- தாம்பரம் ரெயிலில் பயணம் செய்து வந்த ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது அதே ரெயிலில் இறங்கிய நபர் ஒருவர், ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரெயிலில் தப்பிச் சென்றார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை குற்றவாளியை தேடி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக