வெள்ளி, 12 மே, 2023

நவீன் பட்நாயக் : எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி இல்லை.. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி- நவீன் பட்நாயக்

 மாலை மலர்  :  புதுடெல்லி  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கின்றன.
அதேசமயம், மூன்றாவது அணிக்கான முயற்சிகளில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசா சென்று, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மூன்றாவது அணி தொடர்பாக பேசியிருக்கலாம் என தகவல் வெளியானது.


இந்நிலையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், புவனேஸ்வரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புரிக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார். டெல்லியில் வேறு எந்த தலைவர்களையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் கூறினார்.

நிதிஷ் குமாருடான சந்திப்பு மற்றும் மூன்றாவது அணி குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, 'என்னை பொருத்தவரை மூன்றாம் அணிக்கு வாய்ப்பில்லை. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் எந்த எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பிஜூ ஜனதா தளம் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடும்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக