செவ்வாய், 4 ஏப்ரல், 2023

கோவை கல்லூரி மாணவி உயிரிழப்பு! - கர்ப்பம் - டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவலால் பெற்றோர் கதறல்..!

tamil.asianetnews.com : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அந்த மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார்.  கோவையில் கடுமையான வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி யிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அந்த மாணவி அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாணவிக்கு கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.


Sudden death of a college student.. Doctors told shocking news
இதனையடுத்து, அவருடன் தங்கியிருந்த தோழி அதிர்ச்சியடைந்து அந்த மாணவியை மீட்டு ஆட்டோ மூலம் அப்பகுதியில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உடனே மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர், வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Sudden death of a college student.. Doctors told shocking news

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியை உடகை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக