செவ்வாய், 4 ஏப்ரல், 2023

சிறுநீரகத்தின் சக்தியை இரட்டிபாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

 zeenews.india.com  - Vidya Gopalakrishnan  : சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாகும்.
இது இரத்தத்தை வடிகட்டுகிறது.
ஆனால் சிறுநீரகத்தை நோய் தாக்கினால், அதன் வடிகட்டும் சக்தி பலவீனமாகிறது.
 சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ பல நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன.
இது ஆரோக்கியமான மனிதரை கூட நோயாளியாக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானதாக ஆகும்.
மறுபுறம், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீரக நோயின் ஆபத்து மிக அதிகமாக உள்ளது.


ஆரம்பத்திலேயே இது கண்டறியப்படவில்லை சிக்கல் தான்.
ஏனென்றால் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை மூன்றாவது அல்லது கடைசி கட்டத்தை அடைந்தவுடன் தான் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
இரத்த சோகை, சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரியும் உணர்வு, சிறுநீரில் இரத்தம், பலவீனம், சோர்வு, பசியின்மை, உயர் இரத்த அழுத்தம், கால் முதல் உறுப்புகள் வரை வீக்கம் ஆகியவை இதற்கான சில அறிகுறிகள் ஆகும். இது சிறுநீரக பாதிப்பை குறிக்கிறது. நல்ல வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சில மூலிகைகள் மூலம் உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இது மட்டுமின்றி, சில மூலிகைகளை வழக்கமான உட்கொள்ளவது, உங்கள் சிறுநீரக சக்தியை இரட்டிப்பாக்குகிறது. சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் இரண்டு மடங்கு வேகமாக அதிகரிக்கிறது. இவற்றை உங்கள் சமையலறை அல்லது அருகிலுள்ள சந்தையில் எளிதாகக் காணலாம். இந்த மூலிகைகளை உட்கொள்ளும் முறை, அதிலுள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

கிலோய்  (Giloy)

கிலோய் அல்லது அமிழ்தவள்ளி எனும் சீந்தில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளில் ஒன்றாகும். இது மிக எளிதாக கிடைக்கிறது. இது சிறுநீரகத்தை பாதுகாக்க வேலை செய்கிறது. கிலோய் சிறுநீரகங்களை அஃப்லாடாக்சின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆல்கலாய்டு ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது. கிலோய் உட்கொள்வதால் சிறுநீரகங்கள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம். சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்களா... சில எளிய தீர்வுகள்!

திரிபலா பொடி

திரிபலா சூர்ணம், நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் என்றழைக்கப்படுகிறது. இது சிறுநீரகத்திற்கு மிகவும் பயனுள்ள சூர்ணம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிகவும் எளிதான வழியாகும். திரிபலா சிறுநீரகத்தின் திசுக்களை பலப்படுத்துகிறது. இது பிளாஸ்மா புரதம், கிரியேட்டின் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை இரட்டிப்பாக்குகிறது.

மஞ்சள்

உணவின் சுவையை அதிகரிக்கும் மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் பயன்பாடு பிளாஸ்மா புரதத்தை மேம்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளில், சீரம் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை சரிசெய்கிறது. இது சிறுநீரகத்தின் வேலை திறனை அதிகரிக்கிறது.

இஞ்சி

சளி, தலைவலி  ஆகியவைற்றை  நொடியில் போக்கும் இஞ்சியை உட்கொள்வதால் சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் வலி குறைகிறது. சிறுநீரகம் சரியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.

சீமைக் காட்டுமுள்ளங்கி (Dandelion) வேர்

சீமைக் காட்டுமுள்ளங்கி வேர் பற்றி வெகு சிலரே அறிந்திருப்பார்கள். இந்த வேர் மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும். இதன் டையூரிடிக் பண்புகள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. இது சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தியை அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக