வியாழன், 27 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் ஏற்படும் கேவலமான ஃபாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது!

 Kandasamy Mariyappan :  மரியாதைக்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. M. K. Stalin அவர்களுக்கு,
கடந்த சில நாட்களாக திமுக மீதும் அதன் அமைச்சர்களில் ஒருவரான திரு. Palanivel Thiaga Rajan மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.!
அந்த தாக்குதல்களை தொடர்ந்து நிதியமைச்சர் மாற்றப்படுவார் என்ற யூக செய்திகளும் வலம் வருகின்றன.!
ஆனால்,
இன்றுவரையில் திமுக தலைமையிடமிருந்தோ, திமுக செய்தி தொடர்பாளர்களிடமிருந்தோ திரு. தியாகராஜனுக்கு ஆதரவாகவோ, யூக செய்திகளை மறுத்தோ எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டதாக அறியவில்லை!
திரு. தியாகராஜன் மீதான தாக்குதல் என்பது திமுக மீதான தாக்குதல் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
திரு. தியாகராஜன் அவர்கள் சமீபகாலமாக கட்சிக்கு  ஒரு Image builderஆக உருவெடுத்துள்ளார்.!
அகில இந்திய அளவில் கட்சியின் முகமாக வெளிப்பட்டுள்ளார்.!
இந்த Digital உலகில் அந்த Image கட்டாயமாக கட்சிக்கு முக்கியம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.!



இனிமேல் சாதி, பணம் மட்டுமே வைத்து தேர்தலில் வெற்றிபெறுவது சாத்தியமில்லாத  ஒன்று என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.!
முக்குலத்தோர், முத்திரையர், கோனார்கள் அதிகமாக திரு. பன்னீர்செல்வம்/திரு. தினகரன் பக்கம் உள்ளனர்.!
கவுண்டர்கள், வேளாளர்கள், முதலியார்கள், வன்னியர்கள் அதிகமாக திரு. பழனிச்சாமி பக்கம் உள்ளனர்.!
தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் திரு. திருமாவளவன் பக்கம் உள்ளனர்.!
கடந்த 10 ஆண்டுகளாக கடன் வாங்கி கொள்ளையடித்ததில் திரு. தினகரன், திரு. பன்னீர்செல்வம் மற்றும் திரு. பழனிச்சாமியிடம் லட்சம் கோடிகள் இருக்கின்றன.!

இந்தியாவையே கூறுபோட்டு விற்பதால் பாஜகவிடம் பல லட்சம் கோடிகள் இருக்கின்றன.!
சாதிகளையும், பணத்தையும் மட்டுமே வைத்து தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றால் அது அதிமுக, பாஜக மற்றும் விசிகவால் மட்டுமே சாத்தியமாகும்.!
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு கட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.!
அந்த கட்சி தி்முக என்பதை இப்போது மக்கள் உணர்ந்துள்ளனர்.!
அதற்கு வலு சேர்க்கும் விதமாக இருக்கும் சிலரில் திரு. தியாகராஜனை வெளியேற்றுவதில் குறியாக இருக்கிறது திமுகவின் சித்தாந்த எதிரியான RSS.!

இந்த நேரத்தில் சரியாக களமாடாமல் சில பண வெறிபிடித்த, சாதிய சிந்தனை உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பேச்சை  நம்பினால்...
அது திரு. தியாகராஜனுக்கான இழப்பாக அமையாமல் திமுகவிற்கான இழப்பாக தமிழ்நாட்டிற்கான இழப்பாகவே அமையும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.!
ஒருவேளை சில தவறுகள் நடக்கும் நேரத்தில்...

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ஒன்றியத்தில் உள்ள கேடுகெட்ட ஆட்சியை சகித்துக் கொண்ட எங்களால் தமிழ்நாட்டில் ஏற்படும் கேவலமான ஃபாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது.!
#we_standwith_ptr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக