வியாழன், 27 ஏப்ரல், 2023

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி உறுதி... டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்புக்கு பின் அறிவிப்பு!!

 tamil.asianetnews.com -Narendran S  :  டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில்,
 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்


அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரும் உடன் இருந்தனர். அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை இன்று சந்தித்து 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேசினர்.

இந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பின் போது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அண்ணாமலை ஆகியோரும் அமித்ஷாவுடன் இருந்தனர். அவர்கள் பாஜக - அதிமுக இடையிலான விரிசல் குறித்து உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக