சனி, 1 ஏப்ரல், 2023

சீமானின் ஆமைக்கறி பாணியில் வெற்றி மாறன்களும் மணிரத்தினங்களும் .. எல் ஆர் ஜெகதீசன்

 LR Jagadheesan :
சீமானின் ஆமைக்கதைகளும் தமிழ்தேசியர்களின் ஆயுதக்கதைகளும்
உங்களுக்கு படம் புடிச்சா பாருங்க. கொண்டாடுங்க.
ஆனா அதை அடிப்படையா வெச்சி வரலாற்றுப்பாடம் எடுக்காதீங்க.
சீமான் சொன்ன ஈழக்கதைகளைவிட பெரிய புருடாவா இருக்கு நீங்க அவுத்து விடற “தமிழ்நாட்டு தமிழ்தேசிய ஆயுதப்போராட்டக்கதைகள்”.
 இடதுசாரி ஆயுதக்குழுக்களுக்கும் தமிழ்தேசிய ஆயுதக்குழுக்களுக்கும் என்ன வேறுபாடு?
இந்த இரண்டுதரப்பாரையும் தமிழ்நாட்டு இடதுசாரி கட்சிகள் (இடது/வலது இரண்டுமே) ஏன் எதிரியாக பார்த்தன?
கீழவெண்மணி விவகாரத்தில் தமிழ்தேசியம் எங்க வந்தது?

தர்மபுரி மாவட்டத்தில் நடந்தது நில உடைமையாளர்/பண்ணையார்/மேல்ஜாதி ஆதிக்க/சுரண்டல் எதிர்ப்பா அல்லது இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கான எதிர்ப்பா?
அதில் தமிழ்தேசியம் எங்க வந்தது?
புலவர் கலிய பெருமாளின் கடைசி காலம் என்னவாய் இருந்தது?
சு என்கிற சுந்தரம் எப்போது எப்படி பிடிபட்டார்?
எல்லாமே கடந்த 30-40 ஆண்டுகளில் வெகுஜன ஊடகங்களிலேயே மிக விரிவாக பதிவான செய்திகள்.
இதில் வாச்சாத்தி வன்கொடுமைகள் நடந்தபோது “தமிழ்தேசியம்” என்ன செய்தது? 
யாருக்கு ஆதரவாய் இருந்தது? அதுவும் நம் கண் முன் நடந்ததே. இவ்வளவு ஆதாரங்கள் நம் கண்முன் தெளிவாக பதிவான வரலறாக இருந்தும் சீமானுக்கே அண்ணனாய் மாறி “தமிழ்தேசிய ஆயுத போராட்டம்” அதன் கதாநாயகர்கள்னு திடீர் சன்னதமாட ஆரம்பிக்காதீங்க. தாளல. இப்பவே கண்ணை கட்டுது. இதுல ரெண்டாம் பாகம் வேற வரப்போகுதாம். அதுக்குள்ள இன்னும் என்னென்ன கதைவிடப்போறாங்களோ தெரியலை.
பிகு: Yuptuberகளுக்கு ஒரு இலவச யோசனை. புலவர் கலியபெருமாள் கடைசியாய் நடத்துன காய்கறிக்கடையை தேடிக்கண்டுபிடிச்சி போடுங்க. யார் கண்டது. விடுதலை படத்தின் உபயத்தில் தமிழ்தேசிய தம்பிகள் மத்தியில் வைரலாக போனாலும் போகும்.

As much as Ponniyin Selvan is the “History” of the Chola Dynasty, Viduthalai is a “true depiction” of armed political groups of Tamil Nadu. To put it in simple terms WhatsApp University is on the silver screen. Nothing more. If you like these films, enjoy them. I am all for it.
But for ****'s sake please stop taking history classes on social media. Particularly on contemporary Tamil Nadu politics and Tamil Nadu’s armed group's history. It's very recent history. People who were part of it or witnessed it or wrote about it are still alive. There are many. So stop the crap.
For instance, Tamil armed groups did not belong to one ideological mooring. Marxist-Leninist ideological armed groups and Tamil National armed groups not only differed ideologically but also fought each other on the ground. So stop clubbing them as one. That's a police narration. Even more bizarre is bringing Keelavenmani carnage into this debate. That's worse than Seeman’s “role” in Eelam's struggle.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக