சனி, 1 ஏப்ரல், 2023

உண்மையான தமிழ் தாத்தா ஆறுமுக நாவலரே! அவரின் சைவ ஜாதிவெறியே அதற்கு தடையானது .. புலவர் பொ.வேல்சாமி



ஆறுமுகநாவலர் தன் சைவத்தின் மேல் கொண்டிருந்த வெறியில் இருந்து சற்று விலகி இத்தகைய நூல்கள் எல்லாம் தமிழ்த்தாயின் அழகுமிக்க அணிகலன்கள் என்று புரிந்துகொண்டிருந்து இந்நூலை அன்றே (1861)  வெளியிட்டிருப்பாரானால் அவர்தான் தமிழ் முனிவர், தமிழ்த்தாத்தா என்று இன்றைய நிலையில் நினைவு கூறப்பட்டிருப்பார். இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வளையாபதி உ.வே.சா கண்ணில் பட்ட பிறகும்(என் சரித்திரம். பக்.626) அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது (அதாவது அதை ஒழித்து மறைத்து காணாமல் ஆக்கிவிட்டார்) 

 புலவர் பொ வேல்சாமி  :  February 26, 2015 -  நண்பர்களே....இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் இரண்டும் 1860-61 இல் ஆறுமுகநாவலர் வெளியிட்ட திருக்கோவையார் நூலின் முதல்பக்கமும் இறுதிபக்கமும் ஆகும்.  
முதல் பக்கத்தில் இந்நூலின் உரையாசிரியர் நச்சினார்கினியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இருபதாம்நூற்றாண்டுக்கு பின்னர் தான் இந்நூலின் உரையாசிரியர் பேராசிரியர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதே நூலின் இன்றையப் பதிப்புக்களில் உரையாசிரியர் பேராசிரியர் என்று குறிக்கப்பட்டிருக்கும்.  இதேபோன்று பல பழந்தமிழ் நூல்களின் ஆசிரியர், உரையாசிரியர் போன்றவர்களின் பெயர்கள் 19ம் நூற்றாண்டில் அறியபடாமல் இருந்தன.
மிகப்பெரும் புலவரான ஆறுமுகநாவலருக்குக் கூட இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது தமிழ்க் கல்வியின் நிலை 19ம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இரண்டாம் படமானது இந்நூலின் இறுதிபக்கத்தில் விளம்பரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விளம்பரத்தில் ஆறுமுகநாவலர் இனி தான் வெளியிடபோகின்ற நூல்களின் பட்டியலைத் தருகின்றார். அந்தப் பட்டியலில் சீவகசிந்தாமணி உரை,சிலப்பதிகார உரை, மணிமேலை, வளையாபதி, கலித்தொகை உரை, புறநானூறு உரை போன்ற நூல்களும் குறிப்பிடப்படுகின்றன.
இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட காலத்தில் உ.வே.சாமிநாதஅய்யருக்கு வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூல்களை கண்டுபிடித்து வெளியிட்டதனால் உ.வே.சா தமிழ்த்தாத்தா ஆனார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆறுமுகநாவலர் தன் சைவத்தின் மேல் கொண்டிருந்த வெறியில் இருந்து சற்று விலகி இத்தகைய நூல்கள் எல்லாம் தமிழ்த்தாயின் அழகுமிக்க அணிகலன்கள் என்று புரிந்துகொண்டிருந்து இந்நூலை அன்றே (1861) வெளியிட்டிருப்பாரானால் அவர்தான் தமிழ் முனிவர்,
தமிழ்த்தாத்தா என்று இன்றைய நிலையில் நினைவு கூறப்பட்டிருப்பார்.   
இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வளையாபதி உ.வே.சா கண்ணில் பட்ட பிறகும்(என் சரித்திரம். பக்.626) அழிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது (அதாவது அதை ஒழித்து மறைத்து காணாமல் ஆக்கிவிட்டார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக