சனி, 1 ஏப்ரல், 2023

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள் - நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

 மாலை மலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.


அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக