ராதா மனோகர் : சுயமரியாதை!
உங்கள் சுயமரியாதையை சீண்டும் வேலையை உங்கள் எதிரிகளை விட உங்களோடு கூடவே இருப்பவர்கள்தான் அதிகமாக செய்வார்கள்.
வேடிக்கை என்ற ரீதியில்தான் இந்த சுயமரியாதை சீண்டல்கள் அதிகமாக நடக்கிறது
அந்த சீண்டல்களை நட்பு அல்லது உறவு என்ற ரீதியில் நீங்களும் கடந்து செல்வீர்கள்
சிலவேளை நீங்களும்கூட சிரித்து வைப்பீர்கள்.
இங்கேதான் மெதுவாக உங்கள் சுயமரியாதை உணர்வு களவாடப்படுகிறது.
இந்த தந்திரம்தான் பார்ப்பனீயம் காலகாலமாக பயன்படுத்துகிறது!
நம் சமூகத்தில் ஆசிரியர் பெற்றோர் போன்றவர்களே வளரும் சிறுவர்களின் சுயமரியாதையை சீண்டி விடும் கொடுமையை செய்து விடுகிறார்கள்
இது நிமிர்ந்து நிற்கும் ஒருவரை தரையில் தள்ளிவிடும் செயலுக்கு ஒப்பானது.
இந்த விடயத்தில் அசல் பார்ப்பனர்களிடம் இருந்து நாம் பாடம் கற்கலாம் என்று தோன்றுகிறது.
பார்ப்பன வீட்டு குழந்தைகளுக்கு இந்த கொடுமை நடப்பதில்லை.
பெற்றோல் தட்டி கொடுத்து வளர்ப்பார்கள் ..
தள்ளி தரையில் வீழ்த்தி விடுவதில்லை.
உங்கள் தன்னம்பிக்கையை குலைக்கும் ஒவ்வொருவரும் உங்களை தரையில் தள்ளி விழுதி விடுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் தேவை ஏன் உண்டானது என்ற வரலாறை படியுங்கள்
சுயமரியாதைக்கு எந்த வழியில் சவால் வந்தாலும் எதிர்கொண்டு வினையாற்றுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக