ஞாயிறு, 19 மார்ச், 2023

வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !..

“இனி ஒருத்தன் கை வைக்க முடியாது..” : வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !
“இனி ஒருத்தன் கை வைக்க முடியாது..” : வட இந்தியாவில் உருவானது திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு !

  Kalaignar Seithigal -  Prem Kumar ; டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கிவைக்கப்பட்டது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் மாணவர் கூட்டமைப்பை தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார். .


டெல்லி உள்ளிட்ட வட இந்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் எஸ்.இ, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மை மாணவர்களின் நலனுக்காக திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லி உள்ளிட்ட வட இந்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் எஸ்.இ, எஸ்.டி, ஓ.பி.சி, சிறுபான்மை மாணவர்களின் நலனுக்காக இந்த திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் கலைஞரின் மாநில சுயாட்சி தீர்மானங்கள் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு, தந்தை பெரியார் குறித்த மூன்று முக்கிய ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டன.
புத்தாங்களை .அப்துல்லா வெளியிட்டார். அதனை அகில இந்திய ஓ.பி.சி பணியாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கருணாநிதி பெற்றுகொண்டார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைகழகம், வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர்கள் சங்க தலைவர்கள் திராவிட சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் குமார் எம்.பி., “ஜெ.என்.யூ பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், திராவிடர் மாணவர் கூட்டமைப்பு டெல்லி உள்ளிட்ட வட மாநில மாணவர்களுக்கு முக்கிய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக