புதன், 22 மார்ச், 2023

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் - தூத்துக்குடியில் பரபரப்பு

 மாலை மலர்  :  தூத்துக்குடியில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அத்துடன் அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 தூத்துக்குடி மாவட்டம் கீழநம்பியார்புரத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
அப்போது அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரகதீஸ்வரனை பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கியதாக மாணவனின் தாத்தா முனியசாமி ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து முனியசாமியும், அவரது உறவினர்களும் தலைமை ஆசிரியரையும், சக ஆசிரியர்களையும் தாக்கியுள்ளனர்.


பள்ளியில் இருந்த மேசை, நாற்காலி மற்றும் புத்தகங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக