வியாழன், 30 மார்ச், 2023

பாகிஸ்தானில் இலவச கோதுமை .. தள்ளுமுள்ளு இருவர் உயிரிழப்பு - 46 பேர் காயம்

 ஜாப்னா முஸ்லீம் : பாகிஸ்தான் சாஹிவாலில் மக்களுக்காக இலவச மாவு வழங்கப்பட்டது. அப்போது, அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அந்த கூட்டத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் திரண்டனர். கொஞ்ச நேரத்தில் பெண்கள் வரிசையில் நிற்காமல் கோதுமை மாவு வாங்குவதற்காக முண்டியடித்தனர்.இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 46 பேர் காயமடைந்தனர்.
இதேபோல், ரஹீம் யார் கானில் இலவச மாவு வழங்கும்போது, மற்றொரு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதன்போது 73 வயது முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக