ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

யாழ்ப்பாணம் - பிரபல வழக்கறிஞரும் அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்

யாழ்ப்பாணம் -  பிரபல மனித உரிமை வழக்கறிஞரும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காரணமாக இருந்தவரும் பிரபல அரசியல் வாதியுமான திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்கள் காலமானார்  
இவர் ஒரு விபத்தில் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர் யாழ் மாநகர சபையின் பழம்பெரும்  முக்கிய அங்கத்தவராகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாற்று கட்சி உறுப்பினர் மாநகர சபை விவாதத்தின் போது இவரின் ஜாதியை இழிவு படுத்தும் முகமாக இவரை நோக்கி குலத்தளவே ஆகுமாம் குணம் என்று வசைபாடினார்
அப்போது திரு ரெமிடியாஸ் அவர்கள்  நான் அசல் திராவிடன் என்று முழங்கினார்!
இவர் ஒரு சிறந்த  வழக்கறிஞர் ..
போர்காலங்களில் பல பேரை சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்டுள்ளார் ..
பலபேரிடம் பணம் கூட வாங்காது இலவசமாக கூட வாதாடி உள்ளார்
இன்று இவர் காலமான செய்தி அறிந்ததும் இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது
தோழர் திரு ரெமிடியாஸ் முடியப்பு அவர்களுக்கு வீரவணக்கம்

தேசம் நெட் - அருண்மொழி : ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் இன்று காலமானார்.
கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
விபத்தில் காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
அமரர் மு.ரெமிடியஸ் அவர்கள் மனித உரிமை ஆர்வலர். தமிழர் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்ட போதெல்லாம் குரல் கொடுத்த ஒரு நபராவார்.

முக்கியமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறை பேராசிரியர் த.கணேசலிங்கம் அவர்களால் மலையகத்தைச் சேர்ந்த யோகேஸ்வரி முத்தையா என்ற 13 வயதே நிரம்பிய வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் பிள்ளையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக ஆஜராகி தொடர்ந்து வாதாடியவர் அமரர் ரெமிடியஸ். எனினும் குறித்த பாதிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டதை  தொடர்ந்து அந்த வழக்கும் காணாமல் போயிற்று. குறித்த பெண்ணுக்கு எதிராகவும் பேராசிரியர் கணேசலிங்கத்துக்கு ஆதரவாகவும் அன்று வாதாடியவர் சட்டத்தரணி ந.ஸ்ரீ காந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக