tamil.oneindia.com - Mathivanan Maran : தமிழ்நாட்டு தொழிலாளர்கள் மீது அண்டை மாநிலமான ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக மற்றொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டு மீனவர்களும் இலங்கை தமிழ் மீனவர்களும் பாரம்பரியமாகவே இணைந்து மீன்பிடித்தனர். இதன் சாட்சியமாகத்தான் இன்றும் இருக்கிறது கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயம்.
தமிழ இலங்கை மீனவர்களால் கட்டப்பட்டது அந்தோணியார் தேவாலயம். கச்சத்தீவு தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது;
பொருட்கள் மட்டுமேயான பண்டமாற்று சந்தையாக இல்லை.. தமிழ்நாட்டு உறவுகளிடம் இருந்து பெண் எடுப்பதற்கும், பெண் கொடுப்பதற்குமான ஒரு திருவிழாவாக கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவும் இருந்தது என்பது ஒரு காலம்.
அண்டைநாடான இலங்கை தான் இப்படி வேட்டையாடுகிறது என்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரா போலீசாரும் இப்படி ஒரு ஈவிரக்கமற்ற மனிதப் படுகொலையை நிகழ்த்தினர். செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி 20 தமிழ்நாட்டு தொழிலாளர்களை ஆந்திரா வனப்பகுதியில் காக்கை குருவிகளைப் போல சுட்டுப் படுகொலை செய்து வீசியது. இந்த பச்சைப் படுகொலையை கண்டிக்கவோ பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியை பெற்றுத்தரவோ எந்த ஒரு ஜீவனும் ஆபத்பாந்தவனாய் தமிழருக்கு இன்று வரை கிடைக்கவில்லை.
உச்சக்கட்ட பதற்றம்.. தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு! சேலம் மீனவர் மாயம் உச்சக்கட்ட பதற்றம்.. தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு! சேலம் மீனவர் மாயம்
இந்த துயரங்களுக்கு நடுவே இப்போது கர்நாடகா வனத்துறையும் தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டையாடி இருக்கிறது. சேலம் மேட்டூர் அருகே பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் பரிசலில் சென்று மீன்பிடித்ததைக் கூட கர்நாடகாவால் பொறுக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களைத் தடுத்துக் கொண்டே வந்த கர்நாடகா இப்போது துப்பாக்கித் தோட்டாக்களை சீற வைத்திருக்கிறது. கர்நாடகாவின் இந்த படுகொலை ஆட்டத்துக்கு ஒரு தமிழ்நாட்டு மீனவர் பலியாகி இருக்கிறார். இப்படி திரும்பிய திசை எல்லாம் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்கின்ற வெங்கொடுமைக்கு விடிவுகாலம் எப்போதுதானோ?
After Srilanka, Andhra State now the Karnataka Forest Department opened fire on Tamil Nadu fishermen near Mettur, Salem.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக