வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கலைஞருக்கு அருகே இருந்த நல்ல அதிகாரிகளை போன்றவர்கள் இப்போது இல்லை?

 Kulitalai Mano  :  கோபாலபுரம் கலைஞர் முதல்வர் வீடு.
அங்கே எளிய மக்கள் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் சொல்ல வருவார்கள்.
கலைஞர் வெளியே வரும்பொழுது அத்தனை மனுக்களையும் பெற்று  உடனடி உத்தரவுகளை பிறப்பிப்பார்.
பிறகு இப்படியான மனுக்களை பெற தன் வீட்டு வாசலில் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அமர்த்தினார்.
அந்த இளம் அதிகாரி காலை 7.30மணிக்கெல்லாம் கலைஞர் இல்லம் வந்துவிடுவார்.
அப்படி வர அவர் 5மணிக்கெல்லாம் அவர் வீட்டிலிருந்து புறப்படவேண்டும்.
10மணி வரை கலைஞர் கோட்டைக்கு புறப்படும் வரை   மககளிடம் மனுக்களை பெற்று அந்த இடத்திலேயே
அவர்களுக்கான நிவாரணம் கிடைக்க வழி செய்வார்.
சம்பந்தப்பட்டத் துறைகளை போனில் அழைத்து வழிகாட்டுவார்.
எளிய மக்கள் கலைஞரிடம் நேரடியாக சொன்னால் எப்படி நிவாரணம் கிடைக்குமோ


அது போல தன்னை கலைஞரின் காதுகளாக தன்னை  வைத்து மக்களுக்கு அப்படி உதவிகள் செய்வார்.
கலைஞருக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படாமல் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பார்
இவரும் எளிமையாக அணுக எளிதாக இருப்பார் முதல்வரின் தனிப்பிரிவு செயலராக இருந்தார்.
10மணிக்கு பிறகு  தலைமைச்செயலகம் வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவு.
ஆணவமற்ற அணுகுமுறை.
நேர்மையான வாழ்க்கை அவரது பெயர் தேவைஇல்லை.
அவரது செயல்பாடுகளால் பயனடைந்த எளிய  மக்களின் நிம்மதியில் கலைஞரின் பெயருடன்
இவரது பெயரும் இருக்கிறது!
இப்படியான அதிகாரிகள்
கலைஞருக்கு பக்கபலமாக இருந்தனர்.
அந்த நிலை இப்போது ஏன் இல்லை என வருத்தமாக இருக்கிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக