செவ்வாய், 10 ஜனவரி, 2023

ரணில் - ராஜபக்ச கூட்டணி! உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யானை தாமைரை மொட்டு சின்னங்களில் போட்டி

Sri Lanka: Ranil, Sampanthan reach out to Mahinda • Sri Lanka Brief hirunews.lk  : எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மீண்டும் பேச்சுவார்த்தைக்காக இன்று (10) ஜனாதிபதி செலகத்தில் சந்தித்தன.
அதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தலைவர்களுடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


யானைச் சின்னத்தில் போட்டியிடும் உள்ளூராட்சி மன்றங்கள் எவை, மொட்டு சின்னத்தில் போட்டியிடக்கூடியவை எவை என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன்படி கொழும்பு, கண்டி மாநகர சபைகளிலும், புத்தளம் நகர சபையிலும் யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியனவற்றுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சில உள்ளூராட்சி மன்றங்களில் பொதுவான சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் உடன்பாடு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக