புதன், 4 ஜனவரி, 2023

உங்களை உள்ளே விட்டால் ஊரே நாசமாயிடும்' : பா.ஜ.க-வை அடித்து விரட்டிய கிராமம்: கோவையில் நடந்தது என்ன?

Kalaignar Seithigal  : Lenin  : கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சியில் கொடி கம்பம் வைத்த பா.ஜ.க நிர்வாகிகளைப் பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி காலனி பகுதி. இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க கட்சியில் அண்மையில் இணைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் பகுதியில் பா.ஜ.க கட்சியின் கொடிக் கம்பத்தை வைக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொடிக் கம்பம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் இரவு நேரத்தில் கொடிக் கம்பத்தை வைத்துள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் ஒன்றாகச் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்தி அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பா.ஜ.க கொடிக் கம்பத்தை அகற்றினர்.
இந்த சம்பவம் குறித்துக் கூறும் கிராம மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் பா.ஜ.க கட்சியில் சேர்ந்தனர். இதையடுத்து அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரச்சனை ஏற்படுத்தி ஊரில் தகராறு செய்தனர். அதிலிருந்து எங்கள் ஊரில் அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்தது.

இதையடுத்து ஊர் மக்கள் யாரும் பா.ஜ.க கட்சியில் இணையக் கூடாது என முடிவெடுத்தோம். மேலும் நாங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு அண்ணன் தம்பியை போலதான் இருந்து வருகிறோம். ஆனால் எங்க ஊரில் பா.ஜ.க கட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊரை சேர்ந்த சின்னராஜ் என்பவர் பா.ஜ.கவில் சேர்ந்தார். இவர் உதவியுடன் தான் கொடிக் கம்பம் நடப்பார்த்தார்கள். பிறகு போலிஸாரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்போது எங்கள் ஊரில் பா.ஜ.கவை அனுமதிக்க மட்டோம்." என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக