Surya Xavier : திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் இந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த வீடே ரகுநாதன் வீடு.
இதன் அருகில் உள்ள வீட்டுக்காரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் கே.கே.பெருமாள் ராஜா.அந்த வீட்டின் மேலே அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட அடையாளம் உள்ளது.
ரகுநாதனின் மகன் ரங்கராஜ். இளைஞராக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
அவர் திருவில்லிப்புத்தூர் நகராட்சியின் வார்டு உறுப்பினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.
அது சரி யார் அந்த ரங்கராஜ் என்பது தானே உங்கள் கேள்வி?
திருவில்லிப்புத்தூரில் ரங்கராஜ் என்று இருந்து
இன்று யூடியூப்பராக இருக்கும் ரங்கராஜ் பாண்டே தான்.
அவரது அப்பா ரகுநாதன் என்றே அப்போது அழைக்கப்பட்டார்.
நேற்று காலமானார்.
ரகுநாதச்சார்யா என்று ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டுள்ளார்.
ஆச்சார்யாவும்,
பாண்டேவும்
பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டிக் கொண்டதோ?
அவரது மூதாதையர் ஆண்டாள் கோவிலுக்கு பீகாரிலிருந்து பூசாரி வேலைக்காக வந்தவர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக