புதன், 25 ஜனவரி, 2023

நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி!

மின்னம்பலம் - Selvam :  திராவிட இயக்க பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று (ஜனவரி 25) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேச்சு, எழுத்து, இலக்கியம், அரசியல் என அனைத்து துறைகளிலும் இயங்கி வருபவர் நாஞ்சில் சம்பத்.
மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய இவர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் 2016-ஆம் ஆண்டு அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றிய நாஞ்சில் சம்பத், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தற்போது திமுக நடத்தும் விழா கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
இந்நிலையில், நாஞ்சில் சம்பத் உடல்நலக் குறைவு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக