திங்கள், 16 ஜனவரி, 2023

திமுக கூட்டணி 2024 மக்களவை தேர்தலில் 40 க்கு 40 ம் வெற்றி பெற ஆளுநரும் ஒன்றிய அரசும் உதவி செய்கிறது

May be an image of 1 person and text that says 'தமிழ்நாடு'

எல்.ஆர்.ஜெகதீசன்: பாஜக தலைமையும் அதன் டெல்லி சுல்தான் அதிகாரத்துவமும் மூர்க்கத்தனமான திமிர்பிடித்த, அரசியல் அறியாத முன்னாள் அதிகாரிகளை கவர்னர்களாக அனுப்பும் வரை அவர்களால் தமிழ்நாட்டை வெல்ல முடியாது. குறைந்த பட்சம் தற்போதைக்கு அது சாத்தியமில்லை.
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பொருளாதார ரீதியான வலுவான கட்டமைப்புடன் , கல்வியிலும் நன்கு  முன்னேறிய மாநிலமாக  தீர்க்கமான  சுதந்திரமான அடையாளத்துடன் உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில், இந்த உண்மையை உணர்ந்து  ஏற்று மதிக்கும் அரசியல் கட்சிகள்/தலைவர்கள் ஆட்சி செய்தனர்.
திராவிட இயக்கம் அதை வரையறுத்து, கவனமாகக் கட்டமைத்து, உன்னிப்பாக வளர்த்து, பாதுகாத்தது..

காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி மாநிலத்தில் குறுகிய காலம் ஆட்சி செய்தபோதும்,
அதன் தலைவராக  திரு . காமராஜர் விளக்கியதும் ஒரு காரணமாகும்.
அவர் ஒரு உண்மையான தமிழ்த் தலைவராகக் காணப்பட்டார்,
வழக்கமான  காங்கிரஸ் தலைவர்களை போல  டெல்லி தர்பாரின் கைப்பாவையாக அவர்  இருக்கவில்லை.
அந்த நிலையில் இருந்து அவர் தவறிய போது தமிழ்நாடு  அரசின் தலைமைப் பொறுப்பை அவர் இழந்தார்.

இந்த இடத்தை பேரறிஞர் அண்ணா கைப்பற்றினார். அதைத் தொடர்ந்தார் கலைஞர், எம்ஜிஆர். ஜெயலலிதாவும் அதைப் புரிந்துகொண்டு தன்னை அரசின் மீட்பராகக் காட்டிக் கொண்டார்.
அவரது இறுதி முழக்கமான  மோடியா லேடியா என்பது கூட அதன் சுருக்கம்தான்
.
முழு இந்தியாவிலும் மாநில சுயாட்சியின் கடைசி கோட்டையாக ( முழுமையான இலட்சியமாக இருக்காவிடினும் கூட ஓரளவு அதை ஒட்டியே )  உண்மையில் இந்த திராவிட மண்ணில் எந்த வித ஊடுருவலையும் செய்யும் நோக்கம் அவர்களுக்கு  இருந்தால்,
அந்த திராவிட  அடையாளத்திற்கு கொஞ்சம் மரியாதை காட்ட வேண்டும் என்பது முதல் விதி.
அதை அவமதிக்க ஒருபோதும்  துணிய கூடாது .
ஆனால் இப்போது நடப்பது என்ன? எய்தவர்களையே திரும்பி பதம் பார்த்துவிடும் பூமராங் அம்புகளையே அவர்கள் எய்திருக்கிறார்கள்
.
இந்த ஆளுநர் தமிழ்நாட்டில்  காலடி எடுத்து வைத்தது முதல் தமிழ்நாட்டுத் தமிழர்களை தன் சொல்லாலும் செயலாலும் ஒருங்கிணைத்து வருகிறார்.
அரசியலில் திமுக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் கிடைத்த சிறந்த பொங்கல் பரிசு இதுவாகும்!
.
தமிழ் மொழி, தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் சுதந்திரமான அடையாளத்தை அவமதிக்கும் வகையில் ராஜ்பவனில் எவ்வளவு காலம் நீடித்தாலும்,
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40/40 வெற்றி பெற அவர் உதவுவார்.
இது தமிழ்நாடு  அரசுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக