ஞாயிறு, 8 ஜனவரி, 2023

சாதி மறுப்பாளர் சங்கமம் .. 4 வது மாநில மாநாடு! கேரளா அறநிலைய அமைச்சர் கே .ராதாகிருஷ்ணன்

 கேரள அறநிலைய துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன்:  ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரே  வகுப்பு அறையில்  படிக்கும்  வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வைத்திருக்கும் வெவ்வேறு குவளைகள் உள்ளன
ஒன்பது வயதே உள்ள ஒரு குழந்தைக்கு ஜாதியும் மதமும் தெரியாது . தாகத்திற்கு ஒரு குவளையை எடுத்து தண்ணீர் குடித்தது . அந்த குழந்தை எடுத்த குவளை அதன் ஜாதிக்கு உரிய குவளை அல்ல . உயர்ந்த ஜாதிக்கு உரிய குவளை.
அந்த குழந்தையை கடுமையாக தாக்கினார் ஆசிரியர் . அந்த குழந்தை அடுத்த நாள் இறந்தது

தமிழ்நாட்டில் சமூக புரட்சியை முன்னெடுத்து கொண்டிருந்த தந்தை பெரியார் கேரளத்திற்கு வந்தார் . தமிழ்நாட்டில் உள்ள சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கவேண்டும் என்றால் கேரளத்தில் இருக்கின்ற அந்த கொடுமைகளின் உச்சத்தில் அடிக்கவேண்டும் என்று கேரளத்திற்கு வந்தார்.
அவரின் தலைமையில் 1924 இல் வைக்கம் சத்தியா கிரகம் ஆரம்பித்தது


இங்கே அய்யா வைகுண்டரின் ஆறாம் தலைமுறை பெரியவர் கூறியது போல ,
அங்கே நாய்க்கும் பூச்சிக்கும் நடப்பதற்கு சுதந்திரம் இருந்தது .. ஆனால் மனிதனுக்கு அந்த சுதந்திரம் இல்லை

வைக்கம் கோயிலில் நுழைவு போராட்டம் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது   அந்த போராட்டம் வெற்றி பெற்றது .. அங்கே செல்வதற்கான சுதந்திரம் கிடைத்தது

ஒரு காலத்தில் கேரளத்து கோயில்கள் ஒடுக்கப்பட்ட  மக்களை அனுமதிப்பதில்லை .
தமிழர்கள் அதிகமாக வருகை தரும் குருவாயூர் கோயிலில் பாவப்பட்ட மக்களுக்கு அனுமதி கிடையாது
இந்நிலையில்  1931 இல் சத்தியாகிரகம் நடந்தது
தோழர் கிருஷ்ணபிள்ளையின் தலைமையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குருவாயூர் கோயிலில் உள்ளே சென்றனர் .
அங்கே இருந்த மணியை அடித்து வழிபட தொடங்கினர்   அவர் மணியடித்து கொண்டிருக்கையில் பின்னால் நின்று கொண்டு குண்டர்கள்  அவரை அடித்துக்கொண்டே இருந்தனர் ( இன்றய ஆர் எஸ் எஸ் இன் மூதாதையர்கள் அவர்கள்)
அப்போது தோழர் கிருஷ்ணபிள்ளை கூறியது பின்னாளில் பெரிய அளவில் பிரபலமானது  
" உயிரோடு இருக்கும் நாயர் மணி அடிக்கும் ... இல்லை நக்கி நாயர் புறத்தடிக்கும்" இந்த வரிகளுக்கு பின்புதான்  அவர்களின் அடி நின்றது.....
ஒரு காலத்தில் கேரளத்தை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறினார் இது ஒரு பிராந்தாலயமாணு ( ஒரு பைத்தியக்கார ஆசுபத்திரி) அந்த அளவுக்கு ஜாதி கொடுமையும்  மூட நம்பிக்கைகளும் நிறைந்திருந்தது அன்றைய கேரளம் ..
இதிலிருந்து கேரளம் இன்றைய நிலைக்கு வந்ததில் ஏராளமான தோழர்களின் உறுதியான போராட்டங்கள்தான் காரணமாகும்  

கேரள அமைச்சர் தோழர் கே ராதாகிருஷ்ணனின் முழு பேச்சையும் கேளுங்கள் .. ஆங்காங்கே சில இடங்களை மட்டுமே இங்கே தொட்டு காட்டி இருக்கிறேன் . உற்று அவதானித்தால் மலையாள மொழி எமக்கு அந்நிய மொழியல்ல  .உண்மையில் தமிழில் வழக்கொழிந்து போன பல நல்ல தமிழ் சொற்கள் இவரின் பேச்சிலேயே விரவி கிடைப்பதை காணலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக