news.lankasri.com : இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து
பிள்ளைகள் கண்முன்னே தாயை துடிதுடிக்க கொலை செய்துவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு தப்பிச் சென்ற ஒருவர் பிரித்தானியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
பிள்ளைகள் கண்முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட தாய்
2001ஆம் ஆண்டு, தெற்கு லண்டனிலுள்ள வீடு ஒன்றில் (38) என்னும் பெண் தன் பிள்ளைகள் கண் முன்னே துடிக்கத் துடிக்க கொலை செய்யப்பட்டார்.
மனைவியைக் கொலை செய்துவிட்டு, அவரது கணவரான Zafar Iqbal (62) பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டார். மிக நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், கடந்த ஆண்டு Iqbal பிரித்தானியாவுக்கு கொண்டுவரப்பட்டார்.
அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து | London Man Jailed Murdering Wife Front Of ChildrenMET Police
இதற்காகத்தான் காத்திருந்தோம்
Iqbal சிறையிலடைக்கப்பட்ட செய்தி அறிந்த அவரது பிள்ளைகள், தாங்கள் இந்த நாளுக்காக 21 ஆண்டுகள் நம்பிக்கை இழக்காமல் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.
எங்கள் தாயின் எதிர்காலத்தை மட்டுமின்றி எங்கள் எதிர்காலத்தையும் பறித்த நீங்கள் தூங்கும்போது கூட, உங்களுக்கு அவர் முகம் மறக்கக்கூடாது என நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம் என்று கூறியுள்ள அவர்கள், ஆனால் எங்கள் தாயோ எங்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருப்பார் என்றும் கூறியுள்ளார்கள்.
இதற்காகத்தான் காத்திருந்தோம்... பிரித்தானியாவில் தங்கள் கண்முன் தாயைக் கொன்ற தந்தை தொடர்பில் பிள்ளைகள் கருத்து | London Man Jailed Murdering Wife Front Of ChildrenKhan Family
நடந்தது என்ன?
இங்கிலாந்தில் பிறந்த Naziatக்கு, 1985ஆம் ஆண்டு பாகிஸ்தானில் மாப்பிள்ளை தேடி திருமணம் செய்துவைத்தார்கள் அவரது பெற்றோர்.
தம்பதியர் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த நிலையில், 2000ஆம் ஆண்டு Naziatஇன் வாயில் துணியைக் கட்டி, கால்களைக் கட்டிப்போட்டு, உன்னைக் கொல்லப்போகிறேன் என Iqbal மனைவியை மிரட்டும் அளவுக்கு திருமண வாழ்க்கை மோசமாகியிருந்தது.
தொடர்ச்சியாக சண்டை, அடிதடி என பலமுறை தாக்கப்பட்ட Naziat, கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். மனைவி தன்னை விவாகரத்து செய்தால், அது தனக்கு அவமானம் என கருதிய Iqbal, Naziatஐக் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். தாயை தந்தை கழுத்தை நெறித்துக் கொல்வதைக் கண்டு கதறிய பிள்ளைகளிடம், அவள் தன்னை விவாகரத்து செய்யப்போவதாலேயே தான் அவளைக் கொலை செய்வதாகக் கூறிவிட்டு, அவர்கள் கண்முன்னாலேயே மனைவியை துடிக்கத் துடிக்கக் கொலை செய்தார் Iqbal.
யாரிடமாவது உண்மையைச் சொன்னால், இதேபோல உங்களையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய Iqbal, பிள்ளைகளை தெரிந்த ஒருவர் வீட்டில் விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார்.
யாரிடமாவது உண்மையைச் சொன்னால், இதேபோல உங்களையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய Iqbal, பிள்ளைகளை தெரிந்த ஒருவர் வீட்டில் விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தப்பியோடிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக